வெண்மணிநகர், (நாகை) பிப்.24- மின்உற்பத்தி, விநியோ கத்தை ஒழுங்குபடுத்தி, தங்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் உத்தேச மின் கட் டண உயர்வைக் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வலியுறுத்தி யுள்ளது. நாகையில் நடை பெறும் மாநில மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மா னம் வருமாறு: வரலாறு காணாத மின் வெட்டால் தமிழகமே இரு ளில் மூழ்கியுள்ளது. சென்னை யில் இரண்டு மணி நேரமும், மாநி லத்தில் இதர பகுதிகளில் 8 மணி நேரமும் மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் தொழில், விவசாயம், வியா பாரம் ஆகியவையும், தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர் களின் கல்வி யும் கடும் பாதிப் புக்கு உள்ளாகியுள்ளன. தொழிற்சாலைகள் நிறைந்த கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளிலும், வியா பாரம் நிறைந்த திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீதியில் இறங்கி போராடும் மக்களைத் தடுக்க போலீஸ் தடியடிகள் அன்றாட நிகழ்வு களாக மாறி உள்ளன. சிறு, குறு தொழில்கள், குடிசைத் தொழில் மின்சாரமின்றி அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பும், தமிழகத்தின் வளர்ச்சியில் பாதிப்பும் ஏற் பட்டுள்ளது. குடிநீர் விநியோ கம் உட்பட மக்களின் அத்தி யாவசிய தேவைகள் அனைத் தும் பாதிப்புக்குள்ளாகியுள் ளன. மின் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்து, ஆண் டுக்கு 500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்திக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இருந்தால், 7,500 மெகாவாட் மின்சார உற்பத்தி கடந்த 15 ஆண்டுகளில் உயர்ந்து, இன்று 15,000 மெகாவாட் மின்உற்பத் தியை தமிழகம் எட்டியிருக்க முடியும். ஆனால் கடந்த 15 ஆண்டில் திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் 1,000 மெகா வாட்டும், குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் 139 மெகா வாட் மட்டுமே அரசு மட் டத்தில் கூடுதல் மின் உற்பத்தி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை சமா ளிக்க மாநில அரசு மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத் திற்கு கிடைக்க வேண்டிய 2,825 மெகாவாட்டை மத்திய அரசை வலியுறுத்திப் பெற வேண்டும். அதுபோல் தனி யார் மின் உற்பத்தி நிறுவனங் கள் மூலம் கிடைக்க வேண் டிய 1,180 மெகாவாட்டைப் பெறுவதற்கான நடவடிக்கை யையும், தன்பயனீட்டு உற் பத்தியாளர்கள் உற்பத்தி செய் யும் மின்சாரத்தில் உபரியாக உள்ள மின்சாரத்தை நியாய மான விலையில் பெறுவதற் கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அனல் மின் நிலையங்களான வடசென்னை, வல்லூர், மேட் டூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் 3,320 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் உற்பத்தி தொடங்கப் படவில்லை. எனவே கட்டு மானத்தில் உள்ள மின் நிலை யப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து மின் உற்பத்தியை தொடங்கிட தமி ழக அரசு நடவடிக்கை எடுத் திட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத் தியைத் துவங்குவதற்கு அங்கு வாழும் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தி, மக் களின் அச்சத்தைப் போக்கி, சுற்றுவட்டார வளர்ச்சித் திட் டங்களை உறுதிப்படுத்தி மின் உற்பத்தியை தொடங்குவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 925 (இரு அலகுகள் மூலம்) மெகாவாட் மின்சாரம் கிடைப்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்திட வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத் திற்குச் சொந்தமான விரிவாக்க அலகுகள் 1, 2 மூலம் உற்பத்தி யாகும் 500 மெகாவாட் மின் சாரத்தை தமிழகத்திற்கே கிடைக்கச் செய்திட மாநில அரசு துரித நடவடிக்கை எடுத் திட வேண்டும். காற்று, கடல் அலை, சூரிய ஒளி போன்ற மரபுசாரா துறைகள் மூலம் எரிசக்தி நிலையங்களை அமைக் கவும் தமிழக அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த மின் உற்பத்தியை அதி கரிக்க தமிழக அரசே நிதி ஒதுக்கீடு செய்து புதிய மின் நிலையங்களை அமைத்திட வேண்டும். புதிய அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிட மிருந்து பெறுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண் டும். மேலும் மத்திய அரசு ஏற் கனவே அளித்த உத்தரவாதத் தின் மூலம் கிருஷ்ணா, கோதா வரி படுகையிலிருந்து தமிழ கத்திற்குக் கிடைக்க வேண்டிய இயற்கை எரிவாயுவை வலி யுறுத்திப்பெற வேண்டும். பன் னாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி வழங்கும் மின் சாரத்தைக் கட்டுப்படுத்திட வேண்டும். இவ்வாறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு சீரான மின்சாரம் கிடைக்கும் வரை தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும், விவசா யத்திற்கும் மின்தட்டுப் பாட்டை சமாளிக்கும் வகை யில், அவர்களின் ஜெனரேட் டர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். இவையனைத்தையும் சரி செய்து மிகக் குறுகிய காலத் துக்குள் தொழில், விவசாயம், மக்கள் தேவைகளுக்கு தர மான மின்சாரத்தை தடை யின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண் டும். தமிழக அரசு உத்தே சித்துள்ள மின் கட்டண உயர்வு மூலம் ஓராண்டிற்கு 10,000 கோடி ரூபாய் சுமையை சாதாரண மக்கள் மீது சுமத்து கிறது. எனவே அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் உத் தேசிக்கப்பட்டுள்ள அபரி மிதமான மின் கட்டண உயர்வை உடனடியாக திரும் பப் பெற வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை பி.ஆர். நடராஜன் எம்.பி. முன் மொழிய, எஸ்.எஸ்.சுப்பிர மணியம் வழிமொழிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.