சேலம். பிப்.23- மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஒமலூர் பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒமலூர் அடுத்துள்ள கொளசம்பட்டி மின்சார வாரிய அலுவலக முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாரப்பன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பி னர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தமிழக அரசினால் அமல்படுத்தப் பட்டு வருகின்ற அறிவிக் கப்படாத மின்வெட்டை போக்கி, தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும். சிறு, குறுந் தொழில்கள் மின்தடை யின் காரணமாக அழிந்து வருவதை தடுத்திட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன உரையாற் றினார். இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் ஓமலூர் தாலுகா செயலாளர் அரி யாக்கவுண்டர், செயற் குழு உறுப்பினர்கள் சின் ராஜ், மோகன் உட்பட ஐம் பதிற்கும் மேற்பட்ட ஊழி யர்கள் கலந்து கொண்டு மின்வெட்டுக்கெதிராக முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.