ஆர்.உமாநாத் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஏராள மான தொண்டர்கள் பணி யாற்றி வருகின்றனர். இதில் நாகப்பட்டினம் புளிய மரத்துக்கொடியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஆர்.உமாநாத்தும் ஒருவர். பணியாற்றி வரும் தொண் டர்களிலேயே குறைந்த வயது இவருக்குத்தான். நாகப்பட்டினத்தில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் இவர், மாநாடு குறித்து கூறு கையில், எங்கள் ஊரில் மாநாடு நடக்கிறது என்று எங்க அப்பா சொன்னார் . இரவு பகலாக மாநாட்டுப் பணி செய்து வந்தார். மாநாட்டிற்கு தொண்ட ராக வருகிறாயா எனக் கேட்டார். நானும் ஆர்வத் துடன் சரினு சொன் னேன். எனது பேரும் உமா நாத். இங்க வந்திருக்கிற தலைவர்கள்ல ஒருத்தரும் உமாநாத். அவரை நான் நேரில் பார்த்தேன். அவர் கட்சியில் மத்தியக்குழு உறுப்பினர்னு எங்க அப்பா சொன்னாரு. கட்சித்தலை வர்களுக்கு தண்ணி கொடுக் கிறது உள்ளிட்ட வேலை களைச் செய்றேன். எங்க வீட்டுக்கு வருகிற தீக்க திரை இங்கு நிறைய பேர் வைத்திருந்தார்கள். அத னால் அந்த பேப்பரைப் படிக்கணும்னு ஆசை வருது. எங்க ஊருல ரோடு வசதி வேணும். ஆஸ்பத்திரிக்கு போன கூட்டம் நிறையா இருக்கு, அதிகமான டாக் டர்கள் போடணும் என் றார். படிச்சு இஞ்ஜினிய ராக வருவேன் என்று ஆர்.உமாநாத் கூறினார். பா.குணசுந்தரி(26) மாநாட்டில் பணி யாற்றும் பெண் தோழர் களில் மிகக் குறைவான வயதுத் தோழர் இவர்தான். இவரது சொந்த ஊர் டி. மணல்மேடு. தனியார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிக்காக படித்து வருகிறார். மாநில மாநாட்டில் தொண்டராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பி.எஸ்.ஹோசிமின் மாநாட்டில் இளம் வயது செந்தொண்டராக தரங்கம்பாடியைச் சேர்ந்த பி.எஸ்.ஹோசிமின் பணி யாற்றிவருகிறார். மேல் நிலைக்கல்வி இரண்டா மாண்டு படித்து வருகிறார். பிரதிநிதிகளுக்கு உதவி செய்வதும் பாதுகாப்புக் கொடுப்பதும் மனதிற்கு நிறைவைத் தருகிறது. மக் கள் நலனுக்காக பாடுபட்ட மூத்த தலைவர்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சி யளிக்கிறது. உணர்வுப் பூர்வமாக மக்களுக்காகப் போராடும் கட்சி என கேள்விப்பட்டிருக்கிறேன். எனது நண்பர் இந்தப் பணிக்கு அழைத்த மாத்தி ரத்தில் ஓடி வந்தேன். இங்கு வந்தபிறகு தோழர்கள் அணுகுமுறை என்னை வியக்கவைத்தது. ச.ரமேஷ்குமார் மாநில மாநாட்டில் நாகப்பட்டினம் தீக்கதிர் செய்திப்பிரிவு மற்றும் அலுவலகப்பணிகளுக்கு தேவையான கணிப்பொறி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப சாதனங் களையும் திறம்பட நிர் வகித்தவர் ச.ரமேஷ்குமார். 30 வயது நிரம்பிய இவர், எம்.எஸ்.சி. கணிதம் அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வியில் படித்து வருகிறார். மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினர்களில் ஒருவர். மாநாட்டையொட்டி தோழர்கள் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிய போது, அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள், கட்சியின் மீது மக்களுக் குள்ள மரியாதை ஆகி யவை தம்மை வியக்கவைத் தாகக் கூறிய ரமேஷ்குமார், தனியாக டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளார். சுனாமி யால் நாகை மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப் பட்டு அதிலிருந்து மீளத் துவங்கிய போது, உற வினர்கள், தந்தை, தாயை இழந்தவர்கள் மன அழுத் தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை இந்த துயர நிகழ்விலிருந்து மீட்டெ டுக்க சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளார். இதில் 15 பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மாலா என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்துள்ளார். இவரது வகுப்பில் சேர்ந்து, மன அழுத்தத்திலிருந்து விடு பட்டுள்ளார். தற்போது தஞ்சையில் உள்ள பொறி யியல் கல்லூரி ஒன்றில் பி.இ. முதலாமாண்டு படித்து வருகிறார். இப் பணியை செய்து கொண் டிருந்தபோது, அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து பணி யாற்றும் வாய்ப்பு கிடைத் துள்ளது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை பார்த்த இவர் கட்சியில் இணைந்துள்ளார். இன் றைக்கு கடலூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் அலு வலகச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.