நாகர்கோவில், பிப்.24- இது குறித்து கன்னியா குமரி மாவட்ட வன அதி காரி ரிட்டோசிரியாக் மேலும் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மா வட்ட வனப் பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரை ஆறுகள் மற்றும் அணைகள் அதிகமாக உள் ளன. பொதுவாக நாடு செழி ப்பாக இருக்க 33 சதவீத மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் இன்று 30 சதவிதம் மரங்களே எஞ்சியுள்ளன. கடந்த காலங்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான மரங் கள் தற்போது அழிக்கப்பட் டுள்ளன. இதனால் மழையின் அளவு குறைந்துள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு காடு வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டில் குமரி மா வட்டத்தில் ஒரு லட்சம் மர க்கன்றுகள் நடத்திட்டமிட் டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், ரோட் டோரங்களில் மரங்கள் வளர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காடுகள் அழிக் கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களு க்கு விழிப்புணர்வும் ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலை யில் காடுகளில் ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்பட்டு பெரிய சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை வனத் துறையினர், பொதுமக்கள் துணையோடு கட்டுப்படு த்தி வருகின்றனர். பெரும் பாலான தீ விபத்துக்கள் காடுகளுக்குள்ளே அமைந் துள்ள சாலைகளில் செல் லும் வழிப்போக்கர்களா லும், காடுகளில் உள்ள சுற் றுலா இடங்களை பார்வை யிட வருபவர்களாலும் ஏற் படுவதாகதெரியவந்துள்ளது. ஆகவே, கோடைகாலம் முடியும் வரை கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள வன உயிர் சரணாலயத்திற்கு உட்பட்ட உலக்கையருவி, காளிகேசம் மற்றும் கோத க்ஷியார் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் தீப் பெட்டி மற்றும் தீஎளிதில் பற்றும் பொருட்களை கொ ண்டு வரதடை விதிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு குமரி மாவ ட்ட வன அதிகாரி ரிட்டோ சிரியாக் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: