வெண்மணிநகர் (நாகை), பிப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு பிப்ரவரி 25 நிறை வடைகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் செங்கடல் பேரணி நடைபெற உள்ளது. பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட செந்தொண் டர்கள் கம்பீரமாக அணிவகுத்து வர உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நாகையில் பிப்ரவரி 22 ம் தேதி துவங்கி 25 ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட் டின் முத்தாய்ப்பு நிகழ்வாக உழைப்பாளர் பேரணி நடை பெறுகிறது. மக்கள் பிரச்சனைகளுக் காக அயராது பாடுபடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் நிறைவாக தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு கலைக்குழுக்கள் பேரணியில் பங்கேற்கின்றன. கரகம், தப்பாட்டம், சிலம்பாட் டம், சுருள்வாள்வீச்சு, தேவராட் டம், களியாட்டம், ஜிப்ளா மேளம், பெரியமேளம் உள் ளிட்ட தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களை எடுத்துக் காட்டும் நிகழ்வுகளால் நாகை மாவட்டம் சனிக்கிழமையன்று களைகட்டுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலு மிருந்து கடந்த பல மாதங் களாக பயிற்சி பெற்ற 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட செந்தொண் டர்களின் மிடுக்கான அணி வகுப்பு நாகை வீதியில் நடை பெற உள்ளது. தமிழகத்தின் உழைப்பாளி வர்க்கமான விவ சாயிகள், விவசாயத்தொழிலா ளர்கள், ஆலைத்தொழிலாளர் கள், முறைசாராத்தொழிலாளர் கள் , வர்க்க வெகுஜன அமைப் பினர் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொள்கின்றனர். மாநாட்டின் முத்தாய்ப்பாக நடைபெறும் பேரணி, புத்தூர் அண்ணா சிலை அருகி லிருந்து பிற்பகல் 3 மணியள வில் ஆப்பரக்குடி மேளம் மற் றும் நாகை மாவட்டத்தின் கலாச்சார நிகழ்வுகளுடன் பேரணி துவங்குகிறது. அங் கிருந்து துவங்கி மேலக்கோட் டை வாசல், நீலா தெற்குவீதி, நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் வீதி, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாகச் செல்கிறது. மாநாட்டுப் பேரணியை தலை வர்கள் அவுரிதிடல் அருகில் பார்வையிடுகின்றனர். அங்கு தலைவர்களுக்கு செந்தொண் டர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்துகின்றனர். பேரணி நிறைவாக வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் திடலை அடை கிறது. அங்கு தோழர் பி.சீனி வாசராவ் திடலில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில் புதுவை சப்தர்ஹஷ்மி, புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெறு கிறது. இப்பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை வகிக்கிறார். மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரையாற்றுகிறார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சிறப்புரையாற்றுகிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என்.சங்கரய்யா, மாநி லச்செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பி னர்கள் ஆர்.உமாநாத், என். வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி, உ.வாசுகி, மாநில செயற் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தர ராசன் எம்எல்ஏ, கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றுகின்றனர்.வரவேற்புக் குழுப் பொருளாளர் நாகை மாலி நன்றி கூறுகிறார்.

Leave A Reply

%d bloggers like this: