நாகர்கோவில், பிப்.24- நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி அறு வடை தொடங்கி நடந்து வருகிறது; இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய போதுமான கொள் முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்; நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும். குமரி மாவட்டம் கடலோர மாவட்டமாக இருப்பதால் ஈரப்பதம் என்ற நிபந்த னையின்றி டெல்டா மாவட்டங்களில் கொள் முதல் செய்வது போல், களத்து மேட்டிலேயே அறு வடை நெல்லை கொள் முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முத் துக்குமார் தலைமை தாங் கினார். துணைத்தலை வர்கள் ஆறுமுகம்பிள்ளை, மகாதேவன், அகஸ்தீஸ் வரம் ஒன்றியத் தலைவர் பேராசிரியர் பால், செய லாளர் சுப்பாராவ், ராஜாக் கமங்கலம் ஒன்றியத் தலை வர் தாமோதரன், செயலா ளர் டாக்டர் பிரசாத், குருந்தங்கோடு ஒன்றிய தலைவர் ராமசந்திரன், செய லாளர் விஜி, தோவாளை ஒன்றியச் செயலாளர் சிவ தாணு, மாநிலக்குழு உறுப் பினர் சைமன் சைலஸ் மற் றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: