வெண்மணிநகர் (நாகை),பிப்-24- மழலையர் பள்ளியில் துவங்கி மேல்நிலைக் கல்வி வரை தொடரும் தனியார் பள்ளிகளின் கட்டணம் மற்றும் நன்கொடைக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும். கட்டண நிர்ணய குழு நிர்ணயித்துள்ள கட்ட ணங்கள் மிக அதிகம் என்பதால் அது வரும் கல்வியாண்டில் குறைக்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூ லிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வலி யுறுத்தியுள்ளது. நாகையில் நடைபெறும் கட்சி யின் மாநில மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளிக் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்பட்டிருந்தா லும், பள்ளிக் கல்வியின் தரம் இன் னும் மேம்படுத்தப்படாமலேயே உள் ளது. அரசு ஆரம்பப்பள்ளிகளில் பயி லும் குழந்தைகளின் வாசிப்புத் திற னில் தமிழகம் 14வது இடத்திலேயே உள்ளது. சுமார் 50 சதவிகித பள்ளி களில் இன்னும் குடிநீர் மற்றும் கழி வறை வசதி கூட செய்து தரப்பட வில்லை. அறிவிக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் உடனடி யாக செயல்படுத்தப்பட வேண்டும். இது தவிர ஆசிரியர் : மாணவர் விகி தாச்சாரம் என்பது ஆரம்பப்பள்ளி களில் 1:20 மற்றும், உயர்நிலை மற் றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1:30 என்ற அடிப்படையில் காலிப் பணி யிடங்கள் கணக்கிடப்பட்டு ஆசிரி யர் நியமனம் செய்யப்பட வேண்டும். செயல்வழிக் கற்றல் முறையை மேம்படுத்த தேவையான கட்ட மைப்பு வசதிகளை பள்ளிகளில் செய்து தர வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர், வாலிபர், கல்வியாளர் கள் மற்றும் ஜனநாயக இயக்கங் களின் போராட்டங்களாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பாலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர்க் கல்வியின் ஒரு பகுதியான, பொதுப்பாடத் திட்டம் வரும் கல் வியாண்டுகளிலும் தொடர வேண் டும். மேலும் சமச்சீர்க் கல்வி என்பது பாடத் திட்டம் மட்டும் என்று குறுக் கப்படாமல், கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம், ஆசிரியர் நியமனம், கல்வித்தரம் போன்றவை உள்ளிட்ட அருகமை பொதுப்பள்ளி கல்வித் திட்டம் எனும் பொருளில் நடைமுறைப் படுத்திட வேண்டும்.தமிழகத்தில் தனி யார் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங் கிலோ இண்டியன் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளதால், பல பள்ளிகள் மத்திய பாடத்திட்டத்திற்கு மாறி வரு கின்றன. வணிக நோக்கோடு செயல் படும் இத்தகைய பள்ளிகளுக்கு தமி ழக அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கூடாது. மேலும் தாராள மயமாக்கல் கொள்கையின் விளை வாக கல்வி தரும் பொறுப்பிலிருந்து தன்னை படிப்படியாக விடுவித்துக் கொள்ள அரசு- தனியார் பங்களிப்பு திட்டங்களை மத்திய அரசு முன் வைக்கிறது. அத்தகைய திட்டங் களை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ முறையில் நடைபெறும் பள்ளிகளுக் கும் கட்டணங்களை நிர்ணயித்திட மத்திய அரசை தமிழக அரசு வலி யுறுத்திட வேண்டும் என்ற தீர்மா னத்தை ஆர்.மனோகரன் முன் மொழிய கே.எஸ்.கனகராஜ் வழி மொழிந்தார். சில்லரை வணிகம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டால் விவ சாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்று அரசு கூறுகிறது. ஆனால் ஐரோப்பிய இணையத்தின் அறிக்கை ஒன்று ஏகபோக பன்னாட்டுப் பகாசுரக் கம் பெனிகள் தங்களின் பலத்தால் எவ் வாறு விவசாயிகளின் பேர சக்தி மீது தாக்குதல் தொடுக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மலேசியா போன்ற நாடுகளின் அனுபவங்களும் காலப்போக்கிலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்படுகிற அபாயத்தை உணர்த்தியுள்ளன. சராசரி நிலவு டைமை 5 ஏக்கராகவே உள்ள இந்திய நாட்டை 1089 ஏக்கராக உள்ள அமெரிக்காவுடனோ, 17975 ஏக்கராக உள்ள ஆஸ்திரேலியாவுடனோ ஒப் பிடுவது பொருத்தமானது அல்ல. எனவே விவசாயிகளுக்கு பயனளிக் கும் என்கிற வாதம் எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என மாநாடு சுட்டிக் காட்டுகிறது. உலகம் முழுவதும் 8500 கடைகளை கொண்ட வால் மார்ட் மற்றும் டெஸ்கோ போன்ற நிறுவ னங்களின் வருகை இந்தியச் சிறு வணி கத்தைச் சீரழிப்பதாய் அமைந்து விடும். மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்த சிறுவணிகர்களின் போராட் டங்களுக்கு முழு ஆதரவு அளிப்ப தோடு, அந்நிய முதலீட்டை சிறு வணிகத்தில் திணிக்கிற முயற்சிகளை முறியடிக்க அனைத்துப் பகுதி மக் களும் முன்வரவேண்டும். இந்த தீர் மானத்தை க.பீம்ராவ் எம்.எல்.ஏ முன் மொழிய அ.சேகர் வழிமொழிந்தார். பெண்கள் பிரச்சனைகள் கார்ப்பரேட் மயமான ஊடகங் கள், பெண்களை ஆபாசமாகவும், பிற்போக்குத்தனமாகவும் சித்தரிக் கின்றன. ஜனநாயக மாண்புகள் வலுப் பெறாத நிலையில் குடும்பங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் பெண் குழந்தைகள் பல்வேறு பாலி யல் சீண்டல்களில் பாதிக்கப்படுகின் றனர். கௌரவக் குற்றங்கள் (கொலை கள்) தமிழகத்திலும் நிகழ்கின்றன. பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பெண்கள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டங்கள் பல இருந்தும் அவை முறையாக அமல்படுத்தப் படுவதில்லை. பெண்களுக்கு எதி ரான இத்தகைய கொடுமைகளை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது. இக்கோரிக்கைகளை நிறை வேற்ற மத்திய, மாநில அரசுகளை இம் மாநாடு வலியுறுத்துகிறது என்ற தீர் மானத்தை பி.சுகந்தி முன்மொழிய வி. பெருமாள் வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: