நாகர்கோவில், பிப்.24- குமரி மாவட்ட காவல் துறைக்கு சவால் விடும் வகையில் மாவட் டத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தேரூரைச் சார்ந்த வனத் துறை ஊழியர் ஆறுமுகம் மற் றும் அவரது மனைவி யோகீஸ் வரி ஆகிய இருவரும் சாலை யில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளி களை கைது செய்ய நீண்ட போராட்டங்கள் நடைபெற்றன. அதன் பின்னரே, 100 வது நாள் குற்றவாளிகளில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆளுங்கட்சி யைச் சார்ந்த, அதிலும் அமைச் சரின் உதவியாளர் தான் கொலைக்கு காரணம் என்பதும் வெளிச்சத் திற்கு வந்தது. அதே சம்பவத் தில் மற்ற குற்றவாளிகள் இன் னமும் கைது செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட அரசு துறைக்கு சொந்தமான தோட்டா எங்கிருந்து வந்தது என்பது பற்றி இன்னும் பதில் இல்லை. சமீப காலமாக போலீசார் அதிக கவனத்தோடு இரவு ரோந்து செல்கின்றனர். அந் நேரத்தில்தான் அதிகமான கொலை, கொள்ளை சம்பவங் களும் நடைபெற்றுள்ளன. கடந்த 14 ம் தேதி நாகர் கோவில் சைமன் நகரைச் சார்ந்த ஆல்பர்ட் அருள்தாஸ் என் பவரது வீட்டில் புகுந்து அவ ரைக் கொலை செய்ததோடு பதிமூன்றரை சவரன் தங்க நகை களை திருடிச் சென்றுள்ளனர். அதுபோல், நாகர்கோவி லில் மருத்துவர் மற்றும் பேரா சிரியர் ஆகியோரது வீட்டிலும் திருட்டு சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. இதற்கிடையே, கடந்த வெள்ளியன்று காலை யில் தெங்கன்குழியைச் சார்ந்த ஒரு பெண் கொலை செய்யப் பட்டு கிடந்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளன என்பதையே காட்டுகின்றன

Leave A Reply

%d bloggers like this: