முசிறி, பிப். 24- முசிறி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் புதை மணலில் சிக்கி மாயமானார். அவ ரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையி னரும், போலீசாரும் ஈடு பட்டுள்ளனர். பழனி அடிவாரம், வடக்கு கிரி வீதியில் வசிப்பவர் சண்முகநாதன் (எ) ஜம்பு. இவர் பழனி போகர் கோவில் அர்ச்ச கராக பணிபுரிந்து வரு கிறார். இவரது மகன் சரவணன் டிப்ளமோ படித்துள்ளார். வியாழனன்று 23.02. 2012 ரஷ்யாவைச் சேர்ந்த மரியாயி, யாரா, அலெக்ஸி ஆகியோரை அழைத்துக் கொண்டு சரவணன் தனது குடும் பத்தாருடன் முசிறியில் உள்ள உறவினர் வீட் டிற்கு பழனியிலிருந்து வந்துள்ளார். உறவினர்களை சந் தித்து விட்டு முசிறி காவிரி ஆற்றில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்களு டன் குளித்துள்ளார். அப் போது வெளிநாட்டவர் முன்னிலையில் புதை மணலில் சிக்கி சரவணன் காணாமல் போனார். இதில் அதிர்ச்சிய டைந்த வெளிநாட்டவர் கள் சத்தமிட்டுள்ளனர். ஆற்றுப்பகுதியில் இருந்த வர்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சர வணனை தேடியும் இது வரை கண்டுபிடிக்க முடி யவில்லை. சரவணன் குடும்பத் தினரும், வெளிநாட்ட வரும் காவிரி ஆற்றங் கரையில் கதறி அழுதபடி இருந்த காட்சி காண் போர் மனதை உருக்குவ தாக இருந்தது. இந்நிலை யில் முசிறி போலீசாரும் ஆற்றில் காணாமல் போன சரவணனை மீட் கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: