காடுகளில் இருந்து கனிமங்களை வெட்டி யெடுக்க தற்போது இருந்து வரும் விதிமுறை களைத் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்ப தாக தகவல்கள் வெளியாகின்றன. இந்தியக் காடுகளில் உள்ள கனிம வளங் களை ஏற்கனவே மிகப்பெரிய கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதலபாதாளம் வரை சென்று சுரண்டிக் கொண் டிருக்கின்றன. கொள்ளை லாபம் ஒன்றை மட் டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் இந்நிறு வனங்கள் அரசின் விதிமுறைகளை பெயரளவிற் குக் கூட மதிப்பதில்லை. குறிப்பாக வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் சுற்றுப்புறச்சூழல் விதிகள், காடுகள் சட்டம் உள்ளிட்ட எவற்றை யும் பின்பற்றுவதில்லை என சக்சேனா தலை மையிலான குழு ஏற்கனவே சுட்டிக் காட்டியி ருக்கிறது. ஆனால் இந்த மிகப்பெரும் நிறுவனங் கள் மீது மத்திய அரசு எவ்வித உருப்படியான நட வடிக்கையும் எடுப்பதில்லை. இதன் விளைவு, வேதாந்தா சுரங்க திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் இன்றும் சந்தி சிரிக்கின் றன. கர்நாடக மாநிலத்தில் கனிமங்களை வெட்டி எடுப்பதில் நடைபெற்ற ஊழல், மாநில ஆட்சியை ஆட்டம் காண வைத்தது. ரெட்டி சகோதரர்களோடு சேர்ந்து கெட்டியாக அடித்த கொள்ளையில் பாஜகவின் எடியூரப்பாவும் சிக்கி முதல்வர் பதவியை இழந்து தவிக்கிறார். இப்படி இந்தியாவின் கனிம வளங்கள் கேள்வி கேட் பாரின்றி கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கனிமங்களை காடுகளில் இருந்து வெட்டியெடுப்பது தொடர்பாக தற்போது இருக்கிற விதிகளை தளர்த்துவது என்பது கனி மக் கொள்ளையை சட்டபூர்வமாக அங்கீகரிப்ப தாகவே அமையும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. தமிழகத்தில் கூட ஏற்காடு மலைப்பகுதியில் அரசின் எவ்வித சட்டதிட்டங்களையும் பின்பற் றாமல் வேதாந்தா நிறுவனம் மலைகளை குடைந்து கனிமக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாதவர்களாக ஆட்சியாளர்கள் இன்று வரை இருந்து வருகின் றனர். ஆனால் வனத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், காலம் காலமாக இருந்து வரும் மலைவாழ் மக்களை வெளியேற்றுவதில் ஆட்சி யாளர்கள் குறியாக இருக்கின்றனர். காடுகளில் கிடைக்கும் காய்ந்த விறகுகளைப் பொறுக்குவது குற்றம் என, அப்பாவி மக்களை தண்டனைக்கு உள்ளாக்கும் வனத்துறையினர், காடுகளையே அழிக்கும் கனிமக் கொள்ளையர்களுக்கு காவ லர்களாக இருந்து வருகின்றனர். மலையடிவாரங்களை ஆக்கிரமித்து, ஆன் மீகத்தின் பெயரால் கூத்தடிக்கும் நிறுவனங்கள், கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றிற் கும் சகல வசதிகளையும் அரசே செய்து கொடுத்து வருகிறது. உதாரணமாக, கோவையைச் சுற்றி யுள்ள மலைப்பகுதிகளில் ஏழைகளை வெளி யேற்றும் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவல்காப்பதாக இருக்கிறது என்ற குற்றச் சாட்டு கிராம மக்களிடமும் வலுவாகவே இருக்கிறது. இந்தியாவின் இயற்கை வளத்தையும், கனிம வளங்களையும் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியுடன் செயல்பட வேண் டும். கார்ப்பரேட் நலனுக்காக காடுகளில் இருந்து கனிமங்களை வெட்டி எடுக்க இருக்கும் சட்ட விதிகளை தளர்த்துவதை கைவிட வேண்டும். இயற்கை வளங்கள் கொள்ளை போவதை அனு மதியோம் என்ற இயக்கம் எங்கும் வலுப்பெறட் டும். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.