புதுதில்லி: குஜராத்தில் 2002 – 2006ம் ஆண்டுகளில் நடந்த 22 என்கவுண்ட்டர் கொலைகள் தொடர்பான விசாரணை கண்காணிப்பு ஆணை யத்திற்கு புதியத் தலைவரை நியமித்தது குறித்து, தங்களிடம் தெரிவிக்காதது ஏன் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது. என்கவுண்ட்டர் கண்காணிப்பு ஆணையக தலைவராக இருந்த உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி எம்.பி.ஷா தனிப்பட்ட மற் றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பதவி விலகியதால் புதிய தலைவராக மும் பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஆர்.வியாசை, குஜ ராத் முதல்வர் மோடி அரசு நியமனம் செய் தது. ஆலோசனை செய்யாமல் புதிய தலை வர் நியமனம் செய்யப்பட்டதற்கு உச்சநீதி மன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத் தியது. புதிய தலைவர் நியமனம் குறித்த முடிவை எங்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற பெஞ்ச் நீதி பதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் கூறினர். குஜராத் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நீதிமன்ற பெஞ்சிடம் கூறுகையில், மகாராஷ்டிரா மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவரும், நீதிபதியுமான வியாஸ் புதிய தலைவராக வியாழக்கிழமை தான் அறிவிக்கை வெளியிடப்பட்டது. பழையத் தலைவர் ஷா பதவி விலகியதால் உச்சநீதிமன்றத்தின் ஜனவரி 25ம்தேதி உத்தரவுப்படி கண்காணிப்பு குழு இடைக் கால அறிக்கையை உரிய நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.