பெங்களூர், பிப். 24 – கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு கூட்டம், எதிர்மறை முடிவுகளுடன் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில், பிரச்சனையில் தவிக்கும் எடியூரப்பாவுக்கு கட்சியின் பொறுப்பு குறித்தோ அல்லது, முதல்வர் சதானந்த கௌடாவின் பதவி பறிப்பு குறித்தோ முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் எடியூரப்பாவின் போட் டியாளர்களான பாஜக மாநிலத் தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா, கட்சி நிர்வாகிகள் ராமா ஜோயிஸ், பேரா சிரியர் கிருஷ்ண பட் கலந்து கொண்டதே ஆகும். எம்எல்ஏக் களை தனது நலனுக் காக தூண்டிவிட வேண் டும் என்ற எடியூரப்பாவின் எண்ணத்தை நொறுக்க, எடியூரப்பா போட்டியாளர்கள் திட்டமிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், எடியூரப்பா ஆதரவாளர் கள் – பாஜக மாநிலத் தலைமைக்கு எதிராகவோ அல்லது கௌடாவுக்கு எதிராகவோ எந்தக் கருத்தையும் அழுத்த மாகக் கூற முடியவில்லை. இருப்பினும், சிலர் தங்களது தலைவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். மதிய உணவு கூட்டத்திற்கு பின்னர் மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில் எம்எல்ஏக்களின் பல்வேறு கருத்து நிலைப்பாடுகளை குறித்து கண்டறிந்துள்ளோம். சில மூத்தத் தலைவர்கள் தேசிய தலைவர் நிதின் கட்காரியை சந்தித்து, நிலைமையை ஆய்வு செய்கின்றனர். கட்காரி எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு இருக்கிறோம் என்றார். இருப்பினும், போராட்ட நிலையில் இருக்கும் எடியூரப்பா மீண்டும் அதிகாரத்திற்கு வரத் துடித்து மாநில பாஜக தலைமை முடிவு குறித்து பிப்ரவரி 27ம்தேதி காலக்கெடு விதித்துள்ளார். அந்த நாளில் முடிவு ஏதும் எடுக்காதநிலையில் தனது பயணத்தை தொடருவேன் என அவர் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: