பெங்களூர், பிப். 24- முன்னாள் முதல்வர் எடி யூரப்பாவையும் தற்போ தைய முதல்வர் சதானந்தா கவுடாவையும் பாஜக தலை வர் நிதின் கட்காரி சந்தித்து பேசினார். கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக தன்னை தேர்வு செய்ய பிப்ரவரி 27ம்தேதியை முன்னாள் முதல்வர் எடியூரப்பா கெடு விதித்த நிலையில், அவரை யும், தற்போதைய முதல்வர் சதானந்தா கவுடாவையும் பாஜக தேசிய தலைவர் நிதின் கட்காரி வெள்ளிக் கிழமை சந்தித்து பேசினார். அவரது பேச்சுவார்த்தை யில் சமரசம் ஏற்படவில்லை. கவுடா தொடர்ந்து முதல் வராக இருக்க கட்காரி விரும்பினார்.

Leave A Reply

%d bloggers like this: