புதுதில்லி: உத்தரப்பிரதேச மாநிலத் தில் தேசிய ஊரக மருத்துவ சேவைத் திட் டம் செயல்படுத்தப்பட்டதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) நான்கு புதிய வழக்குகளை வெள்ளியன்று (பிப்.24) பதிவு செய்தது. 22 மாவட்டங் களில் 30 இடங்களில் அதிரடிச் சோதனை களையும் சிபிஐ மேற்கொண்டது. விரிவான சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லக்னோ நகரின் மருந்துகள் சந்தைப் பகுதியாகிய அமினாபாத் வட் டாரத்திலும் சோதனைகள் நடத்தப்பட் டன. இது வரையில் இந்த ஊழல் தொடர் பாக சிபிஐ 12 வழக்குகள் பதிவு செய்துள் ளது. இந்தத் திட்டத்திற்காக என மத்திய அரசு ஒதுக்கிய ரூ.10,000 கோடி நிதி கையா டப்பட்டது தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply