வெண்மணிநகர்(நாகை), பிப்.24- இலக்கு நிர்ணயித்த பொது விநியோக முறையை கைவிட்டு விட்டு, அனை வருக்குமான பொது விநி யோகமுறையை அமல் படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு வலியுறுத்தியுள் ளது. நாகையில் நடைபெறும் மாநில மாநாட்டில நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழகத்தில் விலை யில்லா அரிசி திட்டம் தொடர்வதோடு தேசிய அளவில் ஒவ்வொரு குடும் பத்திற்கும் கிலோ ரூ. 2-க்கு மிகாமல் 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும். பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண் ணெய் போன்ற இதர அத் தியாவசியப் பொருட்களை யும் அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருட் களிலும் ஆன்-லைன் வர்த்த கம் மற்றும் ஊக வணிகம் தடை செய்யப்பட வேண் டும். மத்திய அரசு, தனது தொகுப்பிலிருந்து போது மான அளவு உணவு தானி யத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். ரேஷன் கார்டுகள் குறிப்பிட்ட காலத் திற்குள் முறையாக வழங்கப் பட வேண்டும். பதுக்கல், கள்ளச் சந் தைக்கு எதிரான நடவடிக் கைகளை உறுதியுடன் மேற் கொள்ள வேண்டும். உணவு தானிய உற்பத்திக்கு முன்னு ரிமை அளிக்கும் வண்ணம் நிலப் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல், மண் ணெண்ணெய், சமையல் எரிவாயு விலையேற்றம் நிறுத்தப்பட வேண்டும். தமிழக அரசால் ஏற்றப்பட் டுள்ளபால்விலை,பேருந்துக் கட்டண விகிதங்கள் உடனே மறுபரிசீலனை செய்யப் பட்டு குறைக்கப்பட வேண் டும். உத்தேசித்துள்ள செங் குத்தான மின் கட்டண உயர்வு கைவிடப்பட வேண் டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி மக்க ளைத் திரட்டிப் போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு உறுதி ஏற் கிறது என்ற தீர்மானத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி முன் மொழிய மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.சந்திரா வழி மொழிந்தார். உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் தமிழகத்தில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி ஆகிய நகர்ப்புற உள் ளாட்சிகளும், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றி யம், ஊராட்சி என்ற மூன்ற டுக்கு கிராமப்புற உள்ளாட் சிகளும் உள்ளன. அடிப் படை ஜனநாயக அமைப்பு களாக உள்ள உள்ளாட்சி கள் நகர்ப்புற, கிராமப்புற உள்கட்டமைப்பு, சாலை வசதி, மக்களுக்குத் தேவை யான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதாரப் பராமரிப்பு போன்ற அடிப்படை பணி களைச் செய்து வருகின்றன. உள்ளாட்சிகளுக்கு நிதி பகிர்மானம் குறித்து ஆலோ சனை கூற 3 மாநில நிதி ஆணையங்கள் அமைக்கப் பட்டும், அரசின் வரி வரு மானத்தில் வெறும் 10 சத விகிதம் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான உள்ளாட் சிகள் அடிப்படைப் பணி களைச் செய்வதற்குத் தேவை யான நிதியின்றி உள்ளதால் நகர்ப்புற, கிராமப்புற மக் கள் கடும் சிரமத்துக்கு உள் ளாகின்றனர். எனவே தமிழ் நாடு அரசு தனது மொத்த வருமானத்தில் 30 சதவிகித நிதியை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குமாறு இம்மாநாடு கோருகிறது என்ற தீர்மா னத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது முன்மொழிய ஏ.எம்.வி.டெல்பின் வழி மொழிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.