மும்பை: மும்பை ‘ஆதர்ஷ்’ பலமாடிக் குடியிருப்பு ஊழல் தொடர்பாக மஹா ராஷ்டிரா மாநில அரசு அமைத்த இரு உறுப்பினர் விசாரணைக் குழு தனது இடைக்கால அறிக்கையை ‘விரைவில்’ தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. அந்த 31 மாடி கட்டடத்திற்கான நிலத் தின் உரிமையாளர்கள் யார், கார்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவத் தினரின் குடும்பங்களுக்காக அந்த மனை கள் ஒதுக்கப்பட்டிருந்தனவா என்பன உள் ளிட்ட கேள்விகள் தொடர்பாக இந்தக் குழு விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்த விசா ரணைக்குழு அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்தில் குழு தனது அறிக்கையை அளிக்கும் என்று அப்போது அரசு அறி வித்திருந்தது. பின்னர் ஒவ்வொரு முறையும் குழு அறிக்கையை அளிப்பதற்கான கெடு நீட்டிக்கப்பட்டு வந்தது. குழு இதுவரை யில் 36 சாட்சிகளிடம் விசாரணை நடத் தியுள்ளது. எனவே இப்போது குழு ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும் என்றும், மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட் டத்தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் அறிக்கை அளிக்கப்பட்டால், நீதி கிடைக்கச் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் மாநில அரசு குழுவுக்கு அனுப்பிய மனுவில் கோரியுள்ளது. அதை ஏற்றுக்கொண்ட குழு, மாநில அரசும் நாட்டின் பாதுகாப்புத் துறையும் ஆதர்ஷ் நிறுவனமும் தங்களது தரப்பு வாதங்களை மார்ச் 1 முதல் முன்வைக் குமாறு ஆணையிட்டது.

Leave A Reply

%d bloggers like this: