திருவாரூர், பிப். 24- அறுவடை செய்த பிறகு எஞ்சியுள்ள வைக்கோலை விளைநிலங்களிலேயே எரிக்க வேண்டாம் என விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட் சியர் சி.நடராசன் வேண்டு கோள் விடுத்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலை மையில் வியாழக்கிழமை யன்று நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த வேண் டுகோளை அவர் விடுத்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் முன் னோடி விவசாயிகள், முத் துப்பேட்டை, திருத்துறைப் பூண்டி பகுதிகளில் உள்ள பழவனாறு, மரைக்கா கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் உள்ள நீர்நிலை தடைகளையும் ஆக்கிர மிப்புகளையும் அப்புறப் படுத்தி தரவேண்டும். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களி லும் ஜெனரேட்டர் பொருத் தவேண்டும். ஜனவரி மாதத் திலேயே தூர்வாரும் பணி களை தொடங்கி தண்ணீர் திறப்பதற்குள் பணிகளை முடிக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட் டங்களின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் மருத்துவமனைகளும் எந் தெந்த நோய்க்கு எந்த மருத் துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என் பதையும் பொதுமக்கள் அறிந் திடும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் தகவல்களை தெரியப்படுத்தவேண்டும். ஆத்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்து விரி வாக தெரிவிக்க வேண்டும். முள் இல்லா மூங்கில் சாகு படிக்கு இலவச மின்சாரம் தரவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட் சியர் விவசாயிகளின் நியா யமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும். தமிழக அரசின் தாய் திட்டத்தின் கீழ் திரு வாரூர் மாவட்டத்தில் 75 கிராமங்கள் தேர்வு செய் யப்பட்டு முதல்கட்டமாக பணிகள் துவங்கப்பட உள் ளன. இதில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள், சுடு காட்டுப்பாதைகள் உள் ளிட்ட அத்தியாவசிய பணி களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எலிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த நட வடிக்கை மேற்கொள்ளப் படும். நீர்நிலைகளை பாதிக் கும் வெங்காயத்தாமரையை பயனுள்ள உரமாக மாற்று வது குறித்து விரைவில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. அறுவடை செய்த பின்னர் வைக்கோலை அதே வயல்களில் கொளுத் துவதால் பல்வேறு நுண்ணு யிர்கள் இறந்து அடுத்த பருவத்திற்கான விவசாயம் செழிப்படையாமல் போகும். எனவே வைக் கோலை அறுவடை செய்த வயல்களில் கொளுத்த வேண்டாம். இனி வரும் காலங்களில் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் குறித்து அரை மணி நேரம் பயிற்சி அளிக் கப்படும். எனவே விவசாயி கள் பெரும் திரளாக பங் கேற்று பயனடைய வேண் டும் என்று கேட்டுக்கொண் டார். இந்த கூட்டத்தில் எலி ஒழிப்பு குறித்து நீடாமங் கலம் வேளாண் அறிவியல் பயிற்சி நிலைய பேராசிரியர் செங்குட்டுவன் விளக்க மளித்தார். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலா ளர் டி.தியாகராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கபிலன், துணை இயக்குநர் மயில் வாகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: