ஜம்மு: அமைச்சர்கள் அல்லாத சில அரசியல்வாதிகளுக்கு அமைச்சர்களுக் கான ஊதியம், சிறப்புச் சலுகைகள் அளிக் கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு அமைச்சர் தகுதி நிலை அறிவிக்கப்பட்ட ஊழல் தொடர்பாக வெள்ளியன்று (பிப்.24) ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்சனை கிளப்பினர். இந்த ஊழல் குறித்து அரசின் நம்பகத் தன்மை ஆணையம் (எஸ்ஏசி) கடந்தவாரம் முதலமைச்சருக்கும் இதர அரசு வாரியங் களுக்கும் விளக்கம் கோரும் கடிதங்களை அனுப்பியது. இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க அவையின் கேள்விநேரத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கோரி னர். ஆனால் பேரவைத்தலைவர் அதை ஏற்க வில்லை. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: