நாகர்கோவில், பிப். 23- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் சார்பில் 2011- 2012ம் கல்வி ஆண்டில் தமிழகத் தில் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மற்றும் கல் லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளிடமிருந்து எஸ்டிஏடி ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்பட் டுள்ளன. இந்த உதவித்தொகை யை பெற கடந்த 1.7.2010 முதல் 30.6.2011 வரையிலான காலக்கட்டத்தில் நடை பெற்ற அங்கீகரிக்கப்பட்ட தேசிய சம்மேளனம் நடத் தும் தேசிய அளவிலான போட்டிகளிலும், அகில இந்திய பல்கலைக் கழகங் களுக்கிடையே நடை பெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் பயிலும் மாண வர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாண வர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்க உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட விளை யாட்டு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்று பூர் த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்தினை மார்ச் 16ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: