சென்னை, பிப்.23- சென்னை தரமணியில் உள்ள விஎச்எஸ் மருத்துவ மனையின் சேவைகள் தனி யார்மயமாக்கப் படுவதற்குத் தடைவிதிக்கக் கோரி தாக் கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வியாழனன்று (பிப்.23) விசா ரணைக்கு ஏற்றுக்கொண் டது. தமிழக அரசும் மருத் துவமனை நிர்வாகமும் மார்ச் 16ம் தேதிக்குள் பதில னுப்ப நீதிமன்றம் ஆணை யிட்டுள்ளது. மக்கள் சேவைக்காக என, தரமணி பகுதியில் தமி ழக அரசால் வழங்கப்பட்ட 26 ஏக்கர் நிலத்தில் அமைக் கப்பட்டது தன்னார்வத் தொண்டு மருத்துவ சேவை கள் நிறுவனமாகிய விஎச்எஸ் மருத்துவமனை. டாக்டர் சஞ்சீவி உள்ளிட்டோரின் முன்முயற்சியால் உருவான இந்த மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் அரசு ரூ.60 லட்சம் மானியமும் வழங்கி வருகிறது. தரமான மருத் துவ சேவைகள் இங்கே பல் வேறு தரப்பினருக்கும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்திலும், ஏழைக ளுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இதன் மருந்து வழங்கல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சேவை களைத் தனியாரிடம் விடுவ தற்கான நடவடிக்கைகளை புதிய நிர்வாகம் தொடங்கி யது. தமிழ்நாடு மக்கள் நல் வாழ்வு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு எதிர்ப் புத் தெரிவித்து வருகின்றன. நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம், நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ராஜேஸ் வரன் முன்னிலையில் அந்த மனு வியாழனன்று (பிப்.23) விசாரணைக்கு வந்தது. டாக்டர் ரெக்ஸ் சார்பாக வழக்கறிஞர் அய்யாதுரை வழக்கை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். மருத்துவமனையில் மருந்துப்பிரிவு சேவை களில் வெளி நிறுவனங் களை ஈடுபடுத்துவதற்கு (அவுட்சோர்சிங்) தடை விதிக்க வேண்டும், அந்த சேவைகளை மருத்துவ மனை நிர்வாகமே தொடர்ந்து மேற்கொள்ள ஆணையிட வேண்டும், மருத்துவர்கள் ஒப்பந்த முறையில் நியமிக் கப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும், அரசாங் கத்தின் நிலத்திலும் மானியத் திலும் செயல்படும் இந்த மருத்துவனை சேவை களைத் தனியாரிடம் விடுவ தைக் கைவிடுமாறு தமிழக அரசு நிர்ப்பந்திக்க ஆணை யிட வேண்டும் என்று மனு வில் கோரப்பட்டுள்ளது. வழக்கு விவரங்களைக் கேட்ட நீதிபதி ராஜேஸ்வ ரன், “இது விசாரணைக்கு உரிய ஒரு வழக்குதான். அர சாங்கம் நிலம் வழங்கி, மானி யமும் வழங்கிவரும் நிலை யில் மருத்துவமனையில் செயல்முறையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன,” என்று கேட்டார். தமிழக அரசும் மருத்துவ மனை நிர்வாகமும் மார்ச் 16ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, தமிழக அர சின் தலைமைச் செயலருக் கும், மருத்துவமனையின் செயலாளருக்கும் விளக்கம் கோரும் கடிதம் அனுப்ப ஆணையிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: