மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியத் தலை வர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி பல் வேறு நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது. ஆனால் தினமலர் நாளிதழில் மட்டும் இச்செய்தி விஷமத்தனத் துடன் வெளி வந்துள்ளது. செய்தியின் துவக்கப் பகுதியிலேயே மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியில் “துணிகரத் தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளனர். இருவரைப் படுகொலை செய்த கொலை வெறியாட்டத்தை “துணிகரமான” சம் பவம் என்று சொல்வதன் மறைபொருளாக மார்க் சிஸ்ட் கட்சியினர் கொடூரமான வன்முறையாளர்கள், அவர்களையே தாக்கிக் கொலை செய்திருப்பது துணிகரமானது என்று நாசூக்காக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான முறையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கூட்டம் நடத்தியதையே மறைத்துவிட்டு, அதில் புகுந்து திரிணாமுல் காங்கிரஸார் நடத்திய படுகொலைத் தாக்குதலை வன்முறையே இல்லை என்ற தொனியில் அதை உள்ளூர நியாயப்படுத்தியுள்ளது. இதன்மூலம், மார்க்சிஸ்ட்டுகளை துடைத்தெறிய வேண்டும் என்ற கொடூரமான ஆசையை தினமலர் வெளிப்படுத்தி யுள்ளது. தினமலரில் வீசுவது வாசமல்ல, வஞ்சனை!

Leave a Reply

You must be logged in to post a comment.