சென்னை, பிப். 23- சென்னையில் 2 வங்கி களில் ரூ.39 லட்சத்தை துப் பாக்கி முனையில் கொள்ளை யடித்தவர்கள் எனக்கூறி 5 பேர் புதனன்று (பிப். 22) நள் ளிரவில் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னையில் ஒரே மாதத் தில் அடுத்தடுத்து 2 வங்கி களில் துப்பாக்கி முனையில் ரூ.39 லட்சம் கொள்ளையடிக் கப்பட்ட சம்பவம் மக்களி டையே பரபரப்பையும் பீதியை யும் ஏற்படுத்தியது. கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை கள் அமைக்கப்பட்டன. அவர் களை சுட்டு பிடிக்கவும் தனிப் படைக்கு உத்தரவிடப்பட்டது. புதன்- வியாழன் நள்ளிரவில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தாக சென்னை காவல்துறை ஆணையர் அறிவித்தார். இது தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறப்படுவது வருமாறு:- எந்தெந்த வங்கி களில் கேமரா இல்லை என்ப தை அறிந்து அதன்பிறகே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதற்காக பல வங்கிகளில் அவர்கள் நோட் டமிட்டிருக்கலாம் என்று சந் தேகித்ததில் மற்ற வங்கிகளில் பதிவான காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. ஸ்டேட் பாங்க் கிளை ஒன் றின் கேமராவை ஆய்வு செய்த போது, ஒருவன் சந்தேகப் படும்படி வங்கியை சுற்றிச் சுற்றி வருவது தெரிந்தது. அவன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீடியோ காட் சியை கீழ்கட்டளை, பெருங் குடி வங்கி ஊழியர்களிடம் காட்டினர். அதை பார்த்த ஊழி யர்கள், அவன்தான் கொள்ளை யன் என்பதை உறுதி செய்தனர். இந்நிலையில், வேளச் சேரி நேரு நகர், நேதாஜி ரோடு ஏ.எல்.முதலி 2 வது தெருவில் வசிக்கும் பார்வதி என்ற பெண், கொள்ளையன் படத்தை டி.வி.யில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டின் கீழ் தளத்தில் வியாபாரிகள் என்று சொல்லி 5 பேர் தங்கி யிருந்தனர். பார்வதி முதல் மாடி யில் வசிக்கிறார். 2 வது மாடியை 2 பேருக்கு வாடகைக்கு விட் டுள்ளார். கீழ் தளத்தில், வாடகைக்கு இருந்தவர்களில் ஒருவன் புதனன்று (பிப். 22) ஒரு சட்டை அணிந்திருந்தான். அதே சட்டையைத்தான் போலீசார் வெளியிட்ட படத்திலும் அணிந்திருந்தான். இதை கவனித்த பார்வதி, உடனடி யாக தனது தம்பி முருகனிடம் தகவலை தெரிவித்துள்ளார். முருகன், நேரடியாக கிண்டி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று, இன்ஸ்பெக்டரிடம் தகவல் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கொள் ளையர்களை பிடிக்க அவசர அவசரமாக வியூகம் வகுத்த னர். முருகன் அளித்த தகவ லின்படி வீட்டின் வரைபடம் வரையப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் ஆயுதங்களு டன் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே இருப்பவர்களை வெளியில் வர போலீசார் எச்சரித்தனர். ஆனால், வீட்டுக்குள் இருந்த வர்கள் திடீரென போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 2 இன்ஸ்பெக் டர்கள் காயம் அடைந்தனர். போலீசார் ஜன்னலை உடைத்து அதன் வழியாக சுட்டனர். சுட் டுக்கொல்லப்பட்ட கொள்ளை யர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் வினோத் குமார், சந்திர காரே, வினய் பிரசாத், அபய்குமார், அரீஷ் குமார் என்றும் தெரிய வந்துள் ளது. அவர்களது உடல்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: