திருநெல்வேலி, பிப். 23 – ராதாபுரம் மக்கள் மகிழ்ச்சியாக வாழ கடலில் வீணாக கலக்கும் தண்ணீ ரை அணுமின் நிலைய நிதி யுதவி மூலம் ராதாபுரம் மக் களுக்கு திருப்பி விட, அணு உலை ஆய்வுக்குழுத் தலை வர் இனியன், அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அணுஉலை ஆதரவு இயக்க தலைவர் விஜயன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர், பேராசிரியர் இனியனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 2002 ஆண்டு கூடங் குளம் அணு உலை பணி ஆரம்பித்த காலம் முதல் இதுவரை அப்பகுதி மக்க ளுக்கு பல்வேறு நன்மை களை கூடங்குளம் அணு மின் கழகம் செய்துள்ளது. ராதாபுரம் பகுதியில் போதிய மழை இல்லாத தால் குளம்,குட்டைகள் வற்றிப் போய் உள்ளன. கடந்த 2004 சுனாமிக்கு பிறகு நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. இதனால் மக்கள் குடிநீருக்காக அவ திப்பட்டு வருகின்றனர். எனவே, பழைய ஆற்றில் ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கும் நீரை ராதா புரம் பகுதிக்கு திருப்பி விட் டாலே, ராதாபுரம் ஊர் செழிக்கும். இத்திட்டத்தை ரூ.8 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முயற்சி செய் யப்பட்டு, பல்வேறு காரணங்களுக்காக அதை நடைமுறைப்படுத்த முடி யாமல் போய்விட்டது. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் நிதியினை பெற்று பழைய ஆற்றில் வீணாக கலக்கின்ற தண்ணீரை ராதாபுரம் பகு திக்கு கொண்டுவர நடவடிக் கை எடுக்க வேண்டும். ரா தாபுரம் பகுதி மக்கள் மகிழ் ச்சியுடன் வாழவும், தண் ணீர் பஞ்சத்தை போக்கிட வும் மேற்கண்ட திட்டத் தை செயல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: