கரூர், பிப்.24- கரூர் மாவட்டத்தின் முக் கியத் தொழிலாக கருதப் படும் தையல் தொழிலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க மறுப்பதை கண்டித் தும், அறிவிக்கப்படாத கடு மையான மின் வெட்டைக் கண்டித்தும், கரூர் மாவட்ட தையல் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கரூர் கோவை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவல கம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப் பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தையல் தொழிலாளர் கள் சங்கத்தின் மாவட்ட கௌரவ தலைவர் ஆ.முரு கேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் நிர்வாகி பி. ஆனந்த் முன்னிலை வகித் தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் பால் ராஜ், செயலாளர் குமரேசன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். தையல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், பொருளாளர் சக்திவேல், தையல் தொழி லாளர் சங்க நிர்வாகிகள் பால்ராஜ், சிவக்குமார், சர வணன், காமராஜ், மணி வேல், மோகன், முகமது ஜின்னா, பாலசுப்பிரமணி யன், பாபா செந்தில், தாஸ், ராகுல், சரவணன் உள் ளிட்ட ஏராளமானேர் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.