பாஹ்ரைச், பிப். 23 – கட்டார்னியாகட் வன விலங்கு சரணாலயத்தில் இரண்டு புள்ளிமான்களைச் சுட்டுக் கொன்றதாகக் கூறி இருகள்ள வேட்டையாளர் களை வனத்துறையினர் கைது செய்தனர் என்று வனத் துறை மூத்த அதிகாரியொரு வர் கூறினார். சிங் பிரசாத், திலக்ராம் ஆகிய இருவரும் புதனன்று கைது செய்யப்பட்டனர். குற் றம்சாட்டப்பட்டுள்ள கள்ள வேட்டைக்காரர்களுக்கு துணையாக வந்த மூன்று நேபாள கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இறந்த மான் களின் உடல்கள், ஒரு துப் பாக்கி, ஒரு பொறி ஆகி யவை பிடிபட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.