கோவை, பிப். 23- இந்தியா முழுவதும் திடீரென கேளிக்கை வரி யினை 30 சதவிகிதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய் துள்ளது. இம்முடிவினைக் கைவிட வடியுறுத்தி கோவை மாவட்டம் முழுவதும் திரையரங்குகளை மூடி போராட்டம் நடைபெற் றது. இந்தியாவில் திரைய ரங்குகள் இதுவரை 10.33 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்தி வந்தன. இந்நிலை யில் திடீரென மத்திய அரசு கேளிக்கை வரியினை 40.33 சதவிதமாக உயர்த்த முடிவு செய்தது. நாடு முழு வதும் திரையரங்குகளின் உரிமையாளர்கள் இம் முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வியாழனன்று (பிப்-23) திரையரங்கு உரி மையாளர்கள் போராட் டம் அறிவித்தனர். இதனி டையே பிப்.22 அன்று தில்லியில் மத்திய நிதியமைச் சர் பிரணாப் முகர்ஜியு டன் பேச்சுவார்த்தை நடந் துள்ளது. ஆனால் இதில் தீர்வேதும் எட்டப்பட வில்லை. இதனைத்தொடர்ந்து திட்ட மிட்டபடி பிப்-23ம் தேதி இந்தியா முழுவதும் சுமார் 12 ஆயிரம் திரைய ரங்குகள் மூடப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மொத்தமுள்ள 152 திரைய ரங்குகளும் மூடப்பட்டு நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இப்போராட்டத்தை யொட்டி கோவை மாவட் டத்திலும் மாநகர், புறந கர்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட திரையரங்கு கள் மூடப்பட்டன. இப் போராட்டம் குறித்து அறி யாத பொதுமக்கள் சினிமா பார்க்க வந்து ஏமாற்றத்து டன் திரும்பிதைக் காண முடிந்தது. இப்போராட் டம் குறித்து திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறுகையில்: ஏற்கனவே இத்தொழிலில் ரிலைய ன்ஸ் உள்ளிட்ட பெரு நிறு வனங்கள் வந்துவிட்டன. மறுபுறம் திருட்டு விசிடி, சிடி, டிவிடி தொழில் நுட் பங்களால் தியேட்டர் தொழில் கடும் நெருக்கடி யில் உள்ளது. பல திரைய ரங்குகளும் மூடப்பட்டு பிளாட்டுகளாகவும், திரு மண மண்டபங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் மூன்று மடங்கு கேளிக்கை வரியினை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன் றதாகும் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: