சேலம், பிப். 23- சேலம் பெரியார் பல் கலைக் கழத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் கணிப்பொறி யியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை பயின்ற பட்ட தாரி மாணவர்கள் ஆட்சி யர் அலுவலகத்தை முற் றுகையிட்டு ஆர்ப்பாட் டம் நடத்தினர். சேலத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதி ரடி சோதனையில் ஈடுபட் டனர். இதில் மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் விடைத்தாள் திருத்துவ தில் பலமுறைகேடுகள் நடைபெற்றதாக தெரியவந் தது. மேலும். பேராசிரியர் கள் மற்றும் பணியாளர் களை நியமித்ததிலும் முறைகேடுகள் நடைபெற் றதாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் சோதனை யின் போது கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின் றனர். இந்நிலையில் இப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரி களில் இளங்கலை கணி தம், வணிகவியல், அறிவி யல் மற்றும் கணிப்பொறி பாடப்பரிவுகளில் பயின்ற மாணவ. மாணவிகள் திர ளனோர் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் மா வட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தபோதும், அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் ஆட்சியர் அலுவலத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலை முற் றுகையிட்டு ஆர்ப்பாட் டம் நடத்தத் துவங்கினர். இதன்காரணமாக காவல் துறையினருக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உண்டாகும் சூழல் ஏற் பட்டது. இதனால் ஆட்சி யர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்படவே, மாணவர்களில் ஒருசிலரை மட்டுமே ஆட்சியரை சந் திக்க காவல்துறையினர் அனுமதியளித்தனர். இதன் பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாணவர்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். இதில் தாங் கள், பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை கணிதம், வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுடன் சிஏ எனப் படும் கணிப்பொறி பாடத் தை பயின்று பட்டம் பெற் றுள்ளோம். இப்பாடப் பிரிவுகளின் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு விண் ணப்பித்தபோது, இது அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவு என அரசு தேர் வுத்துறை தெரிவித்துள் ளது. மேலும். இப்பாடப் பிரிவில் பயின்று பணியில் சேர்ந்த ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள் ளார். இதன்காரணமாக இப்பல்கலையின் கீழ் பயின்ற மாணவ, மாணவி களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே. தமிழக அரசும், கல்வித் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ஆட்சியரி டம் மாணவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Leave A Reply