வெண்மணிநகர், நாகை, பிப். 23- எழுத்தாளர் என்.ராம கிருஷ்ணன் எழுதிய வாழ்க் கை வரலாற்று நூல்கள் மூன்று மாநாட்டில் வெளியிடப்பட்டன. கோ.பாரதிமோகன் – கடல் கடந்தும் மார்க்சியம் எனும் வாழ்க்கை வரலாற்று நூலை கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் ஏ.கே.பத்மநாபன் வெளி யிட மாநிலச்செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பெற்றுக்கொண் டார். எம்.செல்லமுத்து- மக்கள் தலைவராக மலர்ந்த பண்ணை தொழிலாளி எனும் வாழ்க்கை வரலாற்று நூலை ஏ.கே.பத்மநாபன் வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பெற் றுக்கொண்டார். ஆர்.அமிர்த லிங்கம் – அடிமைத்தளை உடைத்த தென்பரை வீரர் எனும் வாழ்க்கை வரலாற்று நூலை மாநிலக்குழு உறுப் பினர் கோ.வீரய்யன் வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தீக்கதிர் மாநில மாநாட்டு சிறப்புமலரை அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னர் கே.வரதராசன் வெளியிட மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என்.சங்கரய்யா பெற்றுக்கொண்டார். ப.கு.ராஜன் எழுதிய புரட்சியில் பகுத்தறிவு- மார்க்சிய தத்துவம்- நவீன அறிவியல் என்ற நூலை கே.பாலகிருஷ்ணன் வெளியிட ஏ.கே.பத்மநாபன் பெற்றுக்கொண்டார். பிரான்சின் உள்நாட் டுப்போர் என்ற நூலை பெ.சண்முகம் வெளியிட, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பெற்றுக்கொண்டார். நீலக் குறிப்பேடு – லெனின் வாழ்க் கை வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலை பெ.சண்முகம் வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: