வெண்மணிநகர்,நாகை,பிப்.23- மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளும், தொழில் வாரி சம்மேளனங்களும் பிப்ரவரி 28 அன்று நடத்தும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கம் மேற் கொண்டுள்ள இந்த பொது வேலைநிறுத்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு போற்றி வரவேற்கிறது. முன்பேர வர்த்தகம், கள்ளச் சந்தை, கருப்புப் பணம், தடையற்ற ஏற்றுமதிகள் போன்றவற்றால் மூச்சைத் திணறவைக்கும் விலையேற்றம் தொடரு கிறது. கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு, வீட்டு வாடகை போன்றவையும் பலப்பல மடங்கு உயர்ந்து விட்டன. நான்கு கோடி தொழிலாளர்கள் தான் திரட்டப்பட்ட தொழில்களில் நிரந்தரப் பணியில் உள் ளனர். 32 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒப் பந்தக் கூலி முறை, கேசுவல், பயிற்சியாளர் போன்றவர்களாகவும், முறைசாராத் தொழி லாளர்களாகவுமே உள்ளனர். இன்றுள்ள தொழிலாளர் சட்டங்களை கறாராக அமல்படுத்தி போனஸ் போன்றவற்றிற் கான வருமான வரம்புகளை அகற்றி எல் லோருக்கும் பொருந்தச் செய்ய வேண்டும். சட்டங்களை அமலாக்கம் செய்ய வேண் டிய பிரிவுகளை நேர்மையாகச் செயல்பட வைக்க வேண்டும். ஆனால் பிரதமரோ இப்போதுள்ள சட் டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாகத் திருத்த வேண்டுமென தொழிலாளர் மாநாட்டிலேயே பேசுகிறார். தொழிலாளரின் எவ்வித பங்களிப்பும் இல்லாமல் முறை சாராத் தொழிலாளர்களுக்கு பயனுள்ள ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் சமூகப் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம் ஆண்டுதோறும் ஒதுக்கி இவர்களைப் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் வசமுள்ள காப்பீடு, வங்கிகள், சுரங்கங்கள், பி.எச்.இ.எல் (க்ஷழநுடு)போன்ற கனரகத் தொழில்கள், தொலைத்தொடர்பு, பாதுகாப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட நாட்டிற்கு தற்காப்பும், செல்வமும் வழங்கும் ஊற்றுகளை தனி யார்மயப்படுத்தும் கொடிய செயலை அரசு தொடருகிறது. கடுமையான வேலையிழப்பு கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கண்ணிய மான வேலை என்பது தனியார் துறையில் அருகி வருகிறது. தொழிற்சாலைகளில் உள்ள நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும், பெரிய வர்த்தக நிறுவனங்களில் பணி யாற்றுவோருக்கும் சம்பளம் ரூ. 3 ஆயிரத் திலிருந்து ரூ. 5 ஆயிரம் வரை தான் உள் ளது. தனியார் பள்ளிகள், மருத்துவமனை களில் பணியாற்றும் ஆசிரியர், செவிலியர் போன்றவர்களுக்கே மாதச் சம்பளம் ரூ. 3 ஆயிரம் என்ற அவலம் தொடருகிறது. எனவே குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10 ஆயிரம் என்பதை சட்ட உரிமையாக்காமல் கடும் சுரண்டலுக்கு ஆளாகும் இந்த உழைப்பாளிகளைக் காப்பாற்ற முடியாது. தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற வற்றை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்தக் கூலி, பயிற்சி யாளர் போன்ற பெயர்களில் தொழிலாளர் களை நிரந்தரத் தன்மையுள்ள உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவதை முழுமை யாய்த் தடை செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை தொழில்களில் புகுத் தப்படும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். இன்று தொழிலாளர் கள் தங்களுக்கான சங்கத்தை அமைத்துக் கொள்ளும் உரிமையை முதலாளிகள் நடைமுறையில் மறுக்கிறார்கள். குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள், அரசின் துணையோடு பேயாட்டம் போடுகின்றன. உலகத் தொழிலாளர் அமைப்பின் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் கூட் டுப்பேர உரிமை ஆகிய முக்கிய கோட் பாடுகளை மத்திய அரசு இப்போதும் ஏற்க மறுக்கிறது. தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தை அங்கீகரிப் பதைக் கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண் டும். ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்கும் இடங்களில் ரகசிய வாக்கெடுப் பின் மூலம் பெரும்பான்மையைத் தீர் மானிக்க வேண்டும். பெரு முதலாளி களின் சுரண்டலுக்கும், லாப வெறிக்கும் துணை போகும் மத்திய அரசின் நவீன தாராளமய தனியார்மயக் கொள்கைகளை கைவிடச் செய்தாக வேண்டும். இந்தக் கொள்கைகளை எதிர்த்து மக்களையும், தேசத்தையும் காக்கும் நோக்கில் இந்திய தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ள விருக்கும் பொது வேலை நிறுத்தம் மகத் தான வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு 20வது மாநில மாநாடு வாழ்த்துகிறது. பிப்ரவரி 28 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத் தம் தமிழகத்தில் முழுவீச்சில் நடைபெற எல்லா வகையான ஆதரவுகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கிட இந்த மாநாடு கட்சிக் கிளைகள் அனைத்தையும் பணிக்கிறது. பிப்ரவரி 28 பொதுவேலை நிறுத்தத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், வர்த்தகர்களும், சுய தொழில் செய்வோரும், பொதுமக்களும் பேராதரவு நல்க வேண்டுமென மாநாடு வேண்டு கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் முன்மொழிய, மாநிலக்குழு உறுப்பினர் கே.முகமது அலி வழிமொழிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.