அமிர்தசரஸ், பிப். 23 – எல்லை கிராமமான கேம் கரன் அருகே நடந்த மோத லில் ஒரு பாகிஸ்தான் நாட்ட வர் கொல்லப்பட்டார். மற் றொருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடமிருந்து போதை மருந்துகள், ஆயுதங்கள், குண்டுகள் ஆகியவை கைப் பற்றப்பட்டன. புதன் இரவில் எல்லை யில் ரோந்து சென்ற எல்லைக் காவல்படையினர் கேம்கரண் கிராமம் அருகே சந்தேகப் படக்கூடிய நடமாட்டத்தைக் கண்டனர். அவர்கள் பாகிஸ் தானியர் எனத் தெரிந்தவுடன் சரண் அடையுமாறு இந்தியப் படையினர் உத்தரவிட்டனர். பாகிஸ்தானியர் சுட்டவுடன் இந்திய பிஎஸ்எப் திருப்பிச் சுட்டதில் ஒருவர் மாண்டார். மற்றொருவர் தப்பியோடிவிட் டார். இறந்தவரிடமிருந்து சர்வதேசச் சந்தையில் ரூ.65 கோடி மதிப்புள்ள ஹெராயின், ஒரு 9மி.மீ. கைத்துப்பாக்கி, ஒரு கிலோ அபின், ஏராள மான இந்திய கள்ள நோட்டுக் கள் கைப்பற்றப்பட்டன.

Leave A Reply