சேலம், பிப். 23- பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தில் பசுமை வீடு திட் டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டதால், இந்த திட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் கடந்த 30-12-2011 அன்று கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 20 ஊராட் சிகளிலும் பசுமை வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அம்மாபாளையம், தாசநாயக்கன்பட்டி, பாரப் பட்டி உள்ளிட்ட 20 கிராம பஞ்சாயத்துக்களில் 35 பேரும், பிற்படுத்தப்பட்டவர்கள் 10 பேரும், மற்ற இதர வகுப்பினர் 95 பேரும் ஆக மொத்தம் 140 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் பனைமரத்துப் பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு அதிமுக தலைவி லட்சுமி வெங்கடாசலம் தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசு விதிகளை மீறி தகுதி இல்லாதவர்களை தேர்ந்து எடுத்ததாகவும் கூறப்பட்டது. எனவே பயனாளிகள் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் இந்த திட்டத்தை நிறுத்துமாறும் சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீதேவி குமார்,சுந்தர்ராஜன், மணிமேகலை,ஜெயா தனபால் ஆகியோர் கடந்த 9. 2. 2012 ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை கோர்ட்டு 17-1-12-ல் பசுமை வீடு திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இத்திட்டம் இதே நிலையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத் தரவிட்டார். சேலம் பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தில் பசுமை வீடு திட்டத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: