கோவை, பிப். 23- நூறுபேர் முன்னிலை யில் நடுரோட்டில் சாதி யைச் சொல்லி இழிவாகத் திட்டி அவமரியாதை செய்த பேரூராட்சி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியரிடம் துப்புரவுப் பணியாளர்கள் புகார் மனுஅளித்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று கோவை நர சிம்மநாயக்கன்பாளை யத்தைச் சேர்ந்த துப்புர வுப் பணியாளர்கள் சுமார் 20பேர் ஆட்சியர் கருணா கரனிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதா வது: புதனன்று சிவராத் திரி விழாவிற்காக பூச்சியூ ரில் உள்ள 3 கோவில்களில் துப்புரவுப்பணி செய்து விட்டு நரசிம்மநாயக்கன் பாளையம் மேட்டுப்பாளை யம் ரோடு சந்திப்பில் வந்து கொண்டிருந்தோம், அப் போது அங்கு வந்த அதி முகவைச் சேர்ந்த 5-வது வார்டு கவுன்சிலர் கனகராஜ் மற்றும் சுப்பிரமணி, பழனிச் சாமி ஆகியோர் “ஏண்டா சாக்கடை எடுக்க வராமல் எங்கேடா போனீர்கள்” என் வார்டு வேலைகயைச் செய்யாவிட்டால் கை காலை வெட்டிவிடுவேன்” என்று கூறியதோடு எங்கள் சாதிப் பெயரை கெட்ட வார்த்தையுடன் சேர்த்துக் கூறி திட்டினார்கள். நாங் கள் இது குறித்து பேரூ ராட்சித் தலைவர் ஆனந் தனிடம் (அதிமுக) புகார் கூறச் சென்றோம். அவரும் எதையுமே காதில் வாங்கா மல்வெளியேறிபோகுமாறு விரட்டினார். எனவே அதிமுக கவுன்சிலர் உள்ளிட்டோரிடம் இருந்து எங்களுக்கு தகுந்த பாது காப்பு வழங்குவதோடு, பொது இடத்தில் சாதிப் பெயரைச் சொல்லி இழி வாகத் திட்டிய கவுன்சிலர் கனகராஜ் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக் குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டிருந்து.

Leave A Reply

%d bloggers like this: