மன்னார்குடி, பிப். 23- விவசாயிகள் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் மன்னார்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளராகவும் செயல்பட்ட தோழர் ஏ.எஸ்.ராமுவின் 5வது நினைவு தினம் அவ ரது சொந்த ஊரான தலை யாமங்கலத்தில் கடைப் பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஏ. தங்கவேலு தலைமையேற்றார். அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து உரையாற்றினார். மன்னார்குடி நகரச் செய லாளர் கே. நீலமேகம், மாவட்டக்குழு உறுப்பினர் டி. பன்னீர்செல்வம், ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.டி. கந்தசாமி, நகரக்குழு உறுப் பினர்கள் தங்க.ஜெகதீசன், ஜி.ரெகுபதி, ப. தெட்சிணா மூர்த்தி, சாலையோர சில் லரை வியாபாரிகள் சங்க தலைவர் ஜி.தாயுமானவன் ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.