நாகர்கோவில், பிப். 23 சென்னை தொழில் பயிற்சி மையம், மத்திய குறுசிறு ஆலோசனை மையம் (தில்லி), மத்திய குறு சிறு ஆலோசனை மையம் (ஐதராபாத்) ஆகி யவை இணைந்து தக்க லை நூருல் இஸ்லாம் பல் கலைக்கழக வளாகத்தில் ‘நீங்களும் தொழில் அதிப ராகலாம்’ என்ற தலைப் பில் ஒரு மாத பயிற்சிமுகா மை தொடங்குகின்றனர். வெள்ளியன்று காலை 11 மணிக்கு நடைபெறும் முகாம் தொடக்க விழாவு க்கு நூருல் இஸ்லாம் பல் கலைக்கழக தலைவர் மஜி த்கான் தலைமை வகிக்கி றார். மாவட்ட ஆட்சியர் நாகராஜன் முகாமை தொ டங்கி வைக் கிறார். நாகர் கோவில் மைய ஒருங்கி ணைப்பாளர் ரத்தினம் வரவேற்றுப் பேசுகிறார். தொடர்ந்து சென்னை தொழிற் பயிற்சி மைய இயக்குநர் பாலகிருஷ் ணன் வாழ்த்துரை வழங் குகிறார். நிகழ்ச்சியில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவசுப்பிர மணியன், சந்திரசேகர், நாகர்கோவில் தொழில் மைய பொது மேலாளர் ஞானசேகர், தாட்கோ பொது மேலாளர் பாக்கிய ராஜ், கஜேந்திரநாதன், கோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின் றனர்.

Leave A Reply

%d bloggers like this: