ஆனைமலை, பிப்.23- மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கோவை மண்டலத்தின் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் குறித்த ஒன்றிய அளவிலான விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் வியாழனன்று (பிப்.23) ஆனைமலை யில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்தில் துவங்கியது. இம்முகாமின் நிறைவு நாளான இன்று (வெள்ளி யன்று) நடைபெறும் நிகழ்ச்சியில் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப் பினர் எம்.ஆறுமுகம் கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகிறார். ஆதி திராவிடர் நலத்துறையின் பொள்ளாச்சி தனி தாசில் தார் சுப்புலட்சுமி, மத்திய தொழிலாளர் கல்வி வாரி யத்தின் கோவை கல்வி அதிகாரி வி.கிரிஜா சிவ காமி, வால்பாறை கோட்ட காவல்துறை துணை கண் காணிப்பாளர் க.பழனிசாமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

Leave A Reply