தூத்துக்குடி, பிப்.23- தூத்துக்குடி பகுதியில் நீண்ட நாட்களாக நிலுவை யில் உள்ள குடிநீர் வரி மற் றும் சொத்து வரியை வசூல் செய்யும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தூத்துக்குடி மாநகரா ட்சி பகுதிகளில் பல ஆண்டு களாக நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர் வரியை வசூல் செய்ய ஆணையர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் மாநக ராட்சி கண்காணிப்பாளர் ஞானசேகரன் தலைமை யில் ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் வரி வசூல் செய் யும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதுபோல், தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியில் வியாழனன்று வரிவசூல் செய்யும் பணி நடை பெற்றது. வரி கொடுக் காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படும் என எச்சரித்தனர். இதனால், வீட்டின் உரிமை யாளர்கள் இல்லாத வீடு களில் வாடகைக்கு இருப் போர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடு த்து மாநகராட்சி ஊழியர் கள் பொறுமையாக பேச்சு வார்த்தை நடத்தினர். ஒருசில பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. தற் போது ஆணையரின் உத்தர வின்பேரில் வரி வசூல் செய்து வருகிறோம். இதில் நாள் ஒன்றுக்கு ரூ.10லட்சம் முதல் ரூ.13லட்சம் வரை வசூலாகிறது. பொதுமக்கள் அவர்களாகவே மாநகரா ட்சியில் வந்து வரியை செ லுத்தினால் நகரின் வளர் ச்சிப் பணிகள் நடைபெற உறுதுணையாக இருக்கும் என்று மாநகராட்சி கண்கா ணிப்பாளர் ஞானசேகரன் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: