திருவாரூர், பிப். 23- திருவாரூர் நகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், நல்லப்பா நகர், தோப்புத் தெரு ஆகிய பகுதிகளையும் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் உள்ள துர்காலயா ரோட்டினையும் இணைக்கும் பொதுப்பாதையினை மறித்து தனி நபர் ஒருவர் எழுப்பியி ருந்த ஆதிக்கச் சுவர் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்ச னைகள் குறித்தும் பிப்ரவரி 19 தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியாகிஇருந்தது. இதன்பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் துரிதமாக நடவடிக்கை எடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு அறி வுறுத்தியதன் பேரில் மக்க ளின் பயன்பாட்டிற்கு இடையூ றாக இருந்த அந்த ஆதிக்கச் சுவர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழி யர்கள் மூலமாக இடித்து அகற் றப்பட்டது. இதுபற்றிய விபரம் பின் வருமாறு:- மேற்கண்ட பகுதியில் உள்ள பி வாய்க்கால் கரையில் தியாக ராஜன் என்பவரால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப் பாதையை மறைத்து சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. அவர் தமிழ்நாடு மின்சாரவாரி யத்தில் பணியாற்றி ஓய்வு பெற் றவர். திமுக தொழிற்சங்கத்தி லும் முன்னணி தலைவராக இருந்தவர். இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக இந் தச் சுவரை அகற்றக்கோரி அரசு தரப்பிடம் பல்வேறு கோரிக் கைகளை முன் வைத்து வந் தனர். ஆனால் அவர் தனது செல் வாக்கினைப் பயன்படுத்தி பொது மக்களின் செயல்பாடுகளை தடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த பகுதிக்கு உட் பட்ட 4வது வார்டில் அரசியல் கட்சி வேட்பாளர்களை புறக்க ணித்து சுயேச்சையாகப் போட் டியிட்ட ஜி.வரதராஜன் என்ப வரை தங்கள் பகுதி கவுன் சிலராக மக்கள் தேர்வு செய் தனர். இவர் தனது முதல் கட மையாக இந்தச் சுவரை அப் புறப்படுத்தும் பணியில் ஈடுபட் டார். கடந்த 13ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் சி.நடராசனி டம் இப்பகுதி மக்களை அழைத் துச் சென்று, மக்கள் குறைதீர்க் கும் நாள் அன்று மனு ஒன் றினை அளித்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாகத்திற்கு இந்த மனுமீது உடனடி நடவடிக்கை எடுக் கக்கோரி உத்தரவிட்டார். நகராட்சி ஆணையர் க.சர வணன் மற்றும் ஊழியர்கள் பிரச்சனைக்குரிய அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததில், அது பொதுப்பாதை யாக மக்களால் பயன்படுத் தப்பட்டு வந்திருந்ததும், நக ராட்சி மற்றும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் என்பதும் தெரியவந்தது. இந்த பின்னணியில் மாவட்ட ஆட்சியரின் உத்தர வின் பேரில் நகராட்சி பொறி யாளர் புண்ணியமூர்த்தி தலை மையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்துறையினர் கடந்த புதன்கிழமை அன்று (பிப்.22) நகராட்சி ஊழியர்க ளைக் கொண்டு சுவற்றை இடித்து அப்புறப்படுத்தினர் இதன் காரணமாக அப் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து இப்பகுதி நகராட்சி கவுன்சிலர் ஜி.வரதராஜனிடம் கேட்டபோது, மக்களின் கோரிக்கை இவ்வளவு விரை வாக நிறைவேறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமாக இருந்து துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும் நகராட்சி நிர் வாகத்திற்கும் ஊடக துறை யினருக்கும் குறிப்பாக செய்தி யை விரிவாக வெளியிட்டி ருந்த தீக்கதிர் நாளிதழுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதே போல இப்பகுதியில் உள்ள நகர்நல சங்கங்களின் நிர்வாகிகளும், மிகுந்த மகிழ்ச் சியோடு தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்ததோடு, தீக்க திரில் வந்த செய்தி குறித்தும் ஒருவருக்கொருவர் ஆர்வமு டன் பேசிக் கொண்டனர்.அந்த செய்தியின் பிரதிகளையும் அனைவருக்கும் வழங்கினர். மேலும் உடனடியாக இங்கு இணைப்புச்சாலையை அமைத்துத் தருவதோடு இங் குள்ள வாய்க்காலில் மக்கள் கடந்து செல்வதற்கு ஒரு பாலத் தையும் கட்டித்தர வேண்டும் எனவும், மேலும் அந்த சாலை யின் அளவை மறு அளவீடு செய்து இணைப்புச்சாலையை தரமாக அமைத்துத்தர வேண் டும் எனவும் நகர்மன்ற தலை வர் வே.ரவிச்சந்திரனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் அப்பகுதி யை கடந்து செல்வதற்கு தற் காலிகமாக மூங்கில் பாலம் ஒன்றை அமைக்கும் பணியில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டுள் ளனர்.

Leave A Reply

%d bloggers like this: