மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கு பின்னர் திரிணாமுல் காங் கிரஸ் குண்டர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்ற மமதை யில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் வன்முறையை கண்டு அம்மாநில மக்களே வெறுப்படைந்துள்ளனர். ஆட்சிமாற் றத்தை விரும்பிய மக்கள் இன்று ‘நாம் தவறு செய்துவிட்டோமோ’ என்று நினைக்கத் துவங்கி யிருக்கிறார்கள் என்று பத்திரிகைகளே எழுதத் துவங்கிவிட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை மேற்குவங்கத் தின் பர்துவான் மாவட்டத்தில் பிப்ரவரி 28 பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக்குழு உறுப்பினருமான பிரதீப் தாவையும் சிஐடியு தலைவரும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான கமால்கயானை யும் படுகொலை செய்தனர். இந்த அராஜகத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலை கடுமையாக கண்டித் துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு, திரிணாமுல் காங்கிர ஸின் அராஜகத்தை எதிர்த்து நாடு தழுவிய கண் டனம் முழங்குமாறு கட்சியினரையும் இடதுசாரி ஜனநாயக எண்ணம் கொண்டோரையும் கேட் டுக் கொண்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து மக் களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச் சாரம் செய்து வருகிறது. இதனால் மக்களிடம் அதிருப்தி பெருகிவருவதால் ஆத்திரமடைந் துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் வெகு ஜன அமைப்புகளின் தொண்டர்களும் தலைவர் களும் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் அரசின் வேடம் நாளுக்கு நாள் கலைந்து வருகிறது. நிலச் சீர்திருத்தம் செய்து கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத் தும் கொள்ளை போகின்றன. நிலச்சுவான்தார்க ளுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யினர் செயல்படுகிறார்கள். கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. காய்ச்சுவோரும் ஆளும் கட் சியினரே. பொதுவிநியோக முறையும் சீர்குலைக் கப்பட்டு ரேசன் பொருட்கள் கள்ளச்சந்தைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இப்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே சீர்குலைக்கப்பட் டுள்ள நிலையில், பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு பெருகி வருகிறது. அதை சகிக்க முடி யாமல் திரிணாமுல் கட்சியினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை குறிவைத்து தாக்கு கிறார்கள். உள்துறையை தன்வசம் வைத்துள்ள முத லமைச்சர் மம்தா பானர்ஜி, வன்முறையை கட் டுப்படுத்த முயற்சிக்காமல் குண்டர்களுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். குற்றவாளி களுக்கு ஆதரவாக முதலமைச்சர் நற்சான்றிதழ் வழங்குவதால் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று அம் மாநில காவல்துறை உயர் அதிகாரி ஒருவரே கவலை தெரிவித்திருக்கிறார். ஆனால் அரசியல் முதிர்ச் சிக்கு பெயர்போன மேற்குவங்க மக்கள் இந்த நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் அராஜகத்திற்கு அவர்கள் முற் றுப்புள்ளி வைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Leave A Reply

%d bloggers like this: