நாகர்கோவில், பிப். 23- தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர்கள் நியமன த்தை உடனடியாக மேற் கொள்ளவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேலையில் லா ஓவிய ஆசிரியர் நலச் சங்க தலைவர் ரவிக்குமார் தனது அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் பகுதி நேர சிறப்பாசிரி யர்களை நியமிக்கும் திட் டத்தின் கீழ் குமரி மாவட் டத்தில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி போன்ற பணிகளுக்கான சிறப்பாசிரி யர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தப்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு பெற்ற வர்கள் பட்டியல் வெளியி டப்படவில்லை. தேர்வு பெற்ற சிறப்பா சிரியர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் பணிநிய மன ஆணை வழங்கப் பட்டு, அவர்கள் உடனடி யாக பணியில் சேர வேண்டு மென அரசு ஆணை பிறப் பித்திருந்தது. சிறப்பாசிரியர் முழு நேர பணிக்கான மா நில பதிவு மூப்பு பட்டிய லும் இணையதளத்தில் வெளியிடப்படும் என செய்தி வெளியிடப்பட்டி ருந்தது. அதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொ ண்டு, சிறப்பாசிரியர் பணி யிடங்களை நிரப்புவதற்கு ஆணை பிறப்பிக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Leave A Reply