பெய்ரூட், பிப். 23 – பிரிட்டிஷ் நாளிதழ் ‘தி சண்டே டைம்ஸி’ன் மூத்த போர் நிருபரான மேரி கோல்வின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப் பட்டார். அவருடன் பிரான்ஸ் புகைப்படக் கலைஞர் ரெமி ஓச்லிக்கும் கொல்லப்பட்டார். இருவரும் சிரியா நாட் டில் கலவரங்களின் மைய மாக இருக்கும் ஹோம்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பாபா அம்ர் என்னும் இடத் தில் தங்கி போர்ச் செய்தி களை சேகரிக்கும் பணியை செய்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீடு குண்டுவீச் சுக்கு உள்ளானது. கோல் வினும் ஓச்லிக்கும் வீட்டை விட்டு வெளியேற முயன்ற போது ஏவுகணையால் தாக்கப்பட்டு மாண்டனர் என்று’ தி சண்டே டைம்ஸ்’ கூறுகிறது. சிரிய ஜனாதிபதி அசாத் தின் ராணுவம் அரசு எதிர்ப் பாளர்கள் மீது கடும் தாக்கு தலைத் தொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டனர். அவர் களுடன் இருந்த இரு செய் தியாளர்கள் காயமடைந் தனர். பிரிட்டிஷ் தொழில் முறை சுயேச்சை புகைப்பட நிபுணர் பால் கான்ராய், பிரான்ஸ் செய்தித்தாள் லெபிகாரோவின் எடித் போவியர் ஆகிய இருவரும் காயமடைந்தனர். மேரி கோல்வினின் இடது கண்ணை ஒரு கறுப் புத்துணி மறைத்திருக்கும். 2001ம் ஆண்டில் இலங்கை இனக்கலவரத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது ஒரு கையெறி குண் டால் தாக்கப்பட்டபோது அவர் இடது கண்ணை இழந்தார். உலகின் எந்த வொரு மூலையிலும் போர், கலவரம் என்றால் அவர் அங்கு சென்று செய்தி சேக ரிப்பார். மதிப்புக்குரிய போர் செய்தியாளரை பிரிட் டிஷ் செய்தியுலகம் இழந்து விட்டது என்று பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் பிரதமர் டேவிட் கேமரூன் வருத்தம் தெரிவித்தார்.

Leave A Reply