கோவை, பிப். 23- நாகையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட் டிற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவ னர் இரா.அதியமான் வாழ்த்து தெரிவித்துள் ளார். இதுகுறித்து அதி யமான் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனுக்கு எழுதி யுள்ள வாழ்த்துச் செய் தியில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடைபெற்று வருவதை அறிந்து ஆதித்தமிழர் பேரவை, மாநாடு சிறப்பாக நடைபெற தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. கீழைத் தஞ்சை வரலாற் றில் ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விட்ட கம்யூனிஸ்ட் கட்சி, அதே மண்ணில் மாநாடு நடத் துவது போற்றலுக் குரியது. எனவே ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply