வெண்மணிநகர்(நாகை), பிப்,23- நாகையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டில் கட்சிக்காக பல்வேறு போராட் டங்களில் பங்கேற்று சிறைசென்ற தோழர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற் றது. சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி மாநாட்டில் அவர்கள் கௌர விக்கப்பட்டார்கள். மைதிலி சிவராமன் (74) – மாதர் அரங்கம் மைதிலி சிவராமன் ஐ.நா. சபை யில் பணி செய்த போது, வியட்நாமில் அமெரிக்கா நடத்திய கொலை வெறி போரை எதிர்த்த இயக்கங்களால் கவரப் பட்டு, சென்னை திரும்பிய உடனே, 1969-ல் கட்சியுடன் தொடர்பு கொண் டார். கீழ்வெண்மணி நிகழ்வு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் அவர் எழுதியது தான் இந்தியாவின் பல பகுதிகளுக்கு அதன் தியாகத்தையும், அதற்குப் பின்னால் நடந்த அடக்கு முறையையும் கொண்டு சென்றது. 1969-ல் கட்சியின் உறுப்பினரான தோழர் மைதிலி, 1971 முதல் ஒன்றுபட்ட சென்னை – செங்கை மாவட்டக்குழுவிலும் பின்னர் செயற்குழுவிலும் செயல்பட்டார். 1982 முதல் 2008 வரை மாநிலக்குழு உறுப் பினராகவும், மார்க்சிஸ்ட் மாத இதழின் ஆசிரியர்குழுவிலும் பங்காற்றினார். சிறந்த அரசியல் பிரச்சாரகராகவும், அமைப்பாளராகவும் செயல்பட்டார். சென்னை டேப்லெட்ஸ் தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) தலைவராகவும், மெட்டல்பாக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) துணைத்தலைவராகவும் பணி யாற்றி, யூனியன் கார்பைட், டி.வி.எஸ்., பாலு கார்மெண்ட்ஸ், பொன்வண்டு சோப் கம்பெனி உள்ளிட்ட கம்பெனி களின் தொழிலாளர்களுக்காக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி அதன் ஒருங்கி ணைப்பாளராகவும், அகில இந்திய குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் செயல் பட்டவர். 1973-ல் தமிழக ஜனநாயக மாதர் சங்கம் உருவாகிய போது சென்னை மாவட்டத்தின் தலைவராகவும் பல்வேறு மாநிலப் பொறுப்புகளிலும் அகில இந்திய பொறுப்புகளிலும் முத்திரை பதித்தார். மாதர் சங்கத்தை அதன் வெகுஜனத் தன்மையுடன் செயல்பட வைத்ததில் தோழர் மைதிலிக்கு முக்கியமான பாத்தி ரம் உண்டு. இதர பெண்கள் இயக்கங் களுடன் கூட்டு இயக்கம் என்பதிலும், கல்லுhரி மற்றும் மத்தியதர வர்க்கத்தின ரிடையே மாதர் இயக்கத்தை அறிமுகப் படுத்தியதிலும்அவர்பங்குபாராட்டத்தக்கது. அறிவு ஜீவிகளை நமது இயக்கத்தின் பால் ஈர்ப்பதில் அவர் பணி குறிப்பிடத்தக் கது. வே.மீனாட்சி சுந்தரம் (86) நாகை இவர் கடந்த 1951ம் ஆண்டு முதல் கட்சி யின் உறுப்பினராக உள்ளார். 1952-ல் சட்டமன்ற தேர்தலில் மூன்று பஞ் சாயத்துகளுக்குப் பொறுப்பாகச் செயல் பட்டார். 1954 வி.ச தாலுகா கமிட்டி உறுப் பினர், 1966 – 1971 வரை நாகை தாலுகா செயலாளர். 1 வருடம் 6 மாதம் சிறைவாசம் அனுபவித்த தோழர் மீனாட்சிசுந்தரம் 3 மாதம் தலைமறைவாக இருந்துள்ளார். எஸ்.சின்னமுத்து (93) நாமக்கல் 1953ல் கொல்லிமலையில் கம்யூனிஸ்ட் விவசாய சங்கம் துவக்கப்பட்டது. அன்று முதல் அதன் உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் கொல்லிமலை ஒன்றியக்குழு உறுப்பினர், பின்னர் 2004ல் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலை வராகவும் செயல்பட்டவர். இன்றும் மலை வாழ் மக்கள் சங்கப் பணிகளைக் கவ னித்து வருகிறார். எம். மீனாட்சி சுந்தரம்(90) விருது நகர் 1942 ஆம் ஆண்டு முதல் ஒன்று பட்ட கட்சியின் உறுப்பினராக இருந்து வருபவர். விக்கிரமசிங்கபுரம் பஞ்சாலைத் தொழிலாளி, தொழிற்சங்க நடவடிக்கை களில் முன்னணியில் இருந்து செயல் பட்டவர். இரண்டு வருட காலம் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 12 வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர். பின்பு மின்சார வாரியத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு தொழிற்சங்கத்தை உருவாக்கிட செயல்பட்டார். சிஐடியு விருதுநகர் மாவட்ட தலைவராகவும், கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற் குழு உறுப்பினராகவும், முழுநேர ஊழிய ராகவும் செயலாற்றியுள்ளார். வரதன் ( 90 ) வடசென்னை இவர் கட்சியில் 1954ல் உறுப்பினரானார். 1968 முதல் 1971 வரை ஒன்றுபட்ட சென்னை மாவட்டக் குழு உறுப்பினர், பின்னர் கட்சியின் வடசென்னை பகுதி தலைவர், ஹோட்டல் தொழிலாளர் சங்கம், என்ஜினியரிங் அண்டு ரிபோர்ட் பொதுத் தொழிலாளர் சங்கம், வால்டாக்ஸ் ரோடு தொழிலாளர் சங்கம், பி.ஆர். அண்டு சன்ஸ் தொழிலாளர் சங்கம் என பல தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். மக்கள் முன்னேற்ற மன்றம், களப்பால் குப்பு மன்றம், கல்வி வளர்ச்சி மன்றம் என அமைத்து கட்சியைக் கட்டுவதற்கு பயிற்சி அளித்தவர். 3 முறை சிறை சென்றவர். 45 நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். கே.ராஜன் (86): கே.ராஜன், தாழ்த் தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன் னேற்றத்திற்கான போராட்டங்களோடு பொது வாழ்க்கையைத் துவக்கியவர். குன்னூரில் தாழ்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு கட் டித்தருவதில் இவரது பங்கு முக்கிய மானது. 1952ல் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். நீலகிரி மாவட் டச் செயலாளராக பணியாற்றிய இவர், மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது, அமைப்புக்குழுவின் நீலகிரி மாவட்ட அமைப்பாளராக இருந்து செயல்பட்டவர். ஒன்றரை ஆண்டுகள் சிறைவாழ்க் கையை அனுபவித்த இவர் கடலூர் சிறையில் இருந்தபோது தோழர் பி.ஆர் அவர்களின் குறிப்புகளை தொகுத்துத் தரும் உதவியாளராகவும் செயல்பட்டார். எஸ்.மன்னார்சாமி (85) மதுரை மாநகர்: ஒன்றுபட்ட கட்சியில் 1958 லிருந்து இன்றுவரை கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். கட்சியின் மாவட்டக் குழுவிலும், 1964 களில் அடக்குமுறை காலத்திலும், கட்சி தடை செய்யப்பட்டி ருந்த காலத்திலும் மாநில அலுவல கத்தை பொறுப்பேற்று செயல்படுத்தியுள் ளார். மதுரை மோட்டார் தொழிலாளர் சங் கத்தின் ஸ்தாபகத் தலைவர். சிஐடியு மாவட்ட நிர்வாகியாக பல ஆண்டுகாலம் பொறுப்பு வகித்து வந்தவர். ஏ.முனுசாமி(84), திண்டுக்கல்: ஏ.முனுசாமி, 1954ஆம்ஆண்டுகட்சியில் சேர்ந்தார். 3 மாத காலம் சிறைவாசம் அனு பவித்தவர். தோல் பதனிடும் தொழிற் சாலையில் 17 ஆண்டு காலம் பணியாற் றிய அவர், தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணி யம், என்.வரதராஜன், எஸ்.ஏ.தங்கராஜன், எஸ்.எஸ். கிரி ஆகியோருடன் இணைந்து கட்சி மற்றும் தொழிற்சங்கப் பணியாற்றி யவர். திண்டுக்கல் நகராட்சி துணைத் தலைவராக செயல்பட்டவர். 1985ல் திண்டுக்கல் மாவட்டக்குழு உருவான காலத்திலிருந்து மாவட்டக்குழு உறுப் பினராக இருந்தவர். தற்போது தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தலை வராக இருந்து வருகிறார். சி.என்.கிருஷ்ணசாமி(84) கோவை: மில் தொழிலாளியான இவர் 1947-ல் கட்சியில் சேர்ந்தார். 1952ம் ஆண்டு மாவட்டக்குழு உறுப்பினராக வும் செயற்குழு உறுப்பினராகவும் பணி யாற்றியவர். டெக்ஸ்டைல் பணிமனை யில் 20 ஆண்டு காலம் பணி செய்து சிஐ டியு சங்கத்தை கட்டியதில் முக்கியப் பங் காற்றியவர். 1950 கோவை மத்தியச் சிறையில் மே தினத்தைக் கொண்டாடிய குற்றத்திற்காக ஓராண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். 1945-46 உணவுப்பஞ்சம்ஏற்பட்டபோதுஎல்.ஜி.கீதா னந்தன், அப்பு ஆகியோருடன் சேர்ந்து மறி யல் செய்து 15 நாள் சிறையில் அடைக்கப் பட்டார். 1948 ல் கட்சி தடை செய்யப்பட் டதைக் கண்டித்து சுவர் பிரச்சாரம் செய்த தால் கைது செய்யப்பட்டார். 1962ல் முழு நேர ஊழியரான அவர் 55 ஆண்டுகளாக கட்சிப்பணி ஆற்றி வருகிறார். காரைக்கால் பி.தாண்டவசாமி (84) புதுச்சேரி: பி.தாண்டவசாமி, 1947ல் காளிச்சரண் கோஷ் காரைக்காலுக்கு வந்து மாணவர் அமைப்பை ஏற்படுத்திய போது அந்த சங்கத்தில் இணைந்து செய லாளராக செயல்பட்டவர். 1947 ஆகஸ்ட் டில் பிரெஞ்சு அரசாங்கத்தின் அரிசி விலை ஏற்றத்தினை எதிர்த்து நடந்த ஊர்வலம்- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தால் கைது செய்யப்பட்டார்.48ல் நடை பெற்ற விவசாய இயக்கத்திலும், 1949ல் பிரெஞ்சு அரசாங்கம் வெளியேற இயக்கம் நடத்தியபோது மெகா போன் வைத்துப் பேசியதாலும், சித்ரவதைகளுக்கு உட் பட்டு சிறையிலடைக்கப்பட்டவர். 1950ல் பிரெஞ்சு அரசாங்கப் பணத்தை கைப் பற்ற தோழர் ஏ.எம்.கோபு தலைமையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர். மார்க்சிஸ்ட் கட்சி உதய மான போது 3 ஆண்டுகள் கட்சியின் காரைக்கால் செயலாளராக பணியாற்றி னார். புதுவை மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையாஅவர்கள்மார்க்சிஸ்ட்கட்சிக்கு போகக்கூடாது என வற்புறுத்திய பின் பும், அதை மறுத்து சிபிஎம்-ல் சேர்ந்த வர். 1968ல் முனிசிபல் தேர்தலில் நின்று துணைமேயராக தேர்வு செய்யப்பட்டு 1974 வரை பணிபுரிந்தவர். வி.பாலகிருஷ்ணன் (83) மதுரை மாநகர்: வி.பாலகிருஷ்ணன் 1957ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பின ரானார். ஒன்றுபட்ட மதுரை, இராமநாத புரம் மாவட்டக்குழு உறுப்பினராக பணி யாற்றினார். 1953ம் ஆண்டு ஜெனரல் ஓர்க்கர்ஸ் யூனியன் உறுப்பினரானார். இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் வரை பொறுப்பு வகித்தார். மதுரை மாநகரின் கட்டிட தொழிலாளர் சங்கம், எவர்சில்வர் தொழிலாளர் சங்கம், சுமைப்பணி தொழி லாளர் சங்கம், ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனி யன் குறிப்பாக, கைத்தறி தொழிலாளர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1974ம் ஆண்டு நடை பெற்ற கைத்தறித் தொழிலாளர் போராட் டத்தில் போலீஸ் தடியடியால் படுகாய முற்றார். 5 முறை மூன்று மாதம் வரை சிறை சென்றுள்ளார். ஆர்.என்.சுப்ரமணியன்(83)கடலூர்: 1945-ல் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் இடைக்கமிட்டி செயலாளராகவும் மாவட் டக்குழு உறுப்பினராகவும் தொழிற்சங்க அரங்கத்தில் கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளராகவும் துணைத்தலைவராகவும் பணியாற்றிய வர். ஒரு வருட காலம் தலைமறைவாக இருந்துள்ளார். பி.வி.ராமதாஸ் (82) ரயில்வே அரங்கம்: மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பி.வி.ராமதாஸ் , 1951-ல் ரெயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணி யைத் துவக்கியவர். ரெயில்வே தொழி லாளர்களை சங்க ரீதியாக அணிதிரட்டு வதில் தோழர் கே.அனந்தநம்பியார் அவர் களோடு இணைந்து பணியாற்றியவர். எமர்ஜென்சி காலத்தில் காவல்துறை யால் தேடப்படும் நபராக அறிவிக்கப் பட்டு, தலைமறைவாக இருந்து தொழிற் சங்க பணியாற்றியவர். 1974-ல் நடை பெற்ற மிகப்பெரிய ரயில்வே போராட் டத்தை தோழர்கள் ஏ.கே.கோபாலன், கே.அனந்த நம்பியார், எம்.கல்யாண சுந்தரம், ஆர்.உமாநாத் போன்ற தலை வர்களோடு இணைந்து வழி நடத்தியவர். 10 ஆண்டு காலம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகப் பணியாற்றியவர். 52 ஆண்டுகாலமாக கட்சிப் பணியாற்றி வருபவர். எம்.ஆர்.நாராயணசாமி(81) கோவை: ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த வர். சுயமாக பிரி மெட்ரிக் கல்வி முடித் தவர். பிஜிஜி தொழிற்சாலையில் தொழி லாளியாகப் பணியாற்றியபோது, தொழி லாளர்கள் மீதான கடும் அடக்கு முறைக்கு எதிராக போராடியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டார். தற் போதும் சொந்த ஊரான மணியக்காரன் பாளையத்தில் கிளைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். 81 வயதிலும் தீக்கதிர் விநியோகித்து வருகிறார். எஸ்.கே.சேசாசலம்(81) நாமக் கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், சூரியம்பாளையத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் 1947ல் காங் கிரஸ் கட்சித் தலைவர்களை தாக்கிய தாகவும், பொதுக்கூட்டத்தில் புகுந்து அடித்ததாகவும், இவரது தந்தை காவேரி முதலியார் மற்றும் 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக காவேரியின் மகனான சேசாசலம், தோழர் வீராசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் மீண்டும் அதேபோன்ற வழக்கு ஜோடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். சேசாசலத்தின் தந்தை காவேரி போலீசாரிடம் எந்த ரகசியத்தையும் நீங்கள் கூறக்கூடாது என புத்திமதி கூறிச் சென்ற சில தினங் களிலேயே காவல்துறையின் துப்பாக் கிக் குண்டுகளுக்கு இரையானார். தந்தை மறைந்த செய்தி கேட்டு தந்தையின் சட லத்தை பார்க்க அனுமதி கோருகிறார்; அனுமதி மறுக்கப்படுகிறது. தந்தை முகத்தை பார்க்க மனம் துடிக்கிறது. மறுபுறம் தந்தை கூறிய எதற்கும் பயப் படாதே என்ற வார்த்தை 19 வயதே நிரம் பிய சேசாசலத்தை உறுதிமிக்க கம்யூ னிஸ்ட்டாக மாற்றுகிறது. தொடர்ந்து தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்ட அவர் திருச்செங்கோடு தாலுகா குழு உறுப் பினராக, திருச்செங்கோடு நகரக்குழு உறுப்பினராக செயல்பட்டார். 1964ம் ஆண்டு கட்சி பிரிந்தபோது மோகன் குமாரமங்கலத்தின் ஊரான திருச்செங் கோட்டில் வலதுசாரிகளை எதிர்த்து தோழர் வி.ராமசாமியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி இன்று வரை செயல்பட்டு வருகிறார். எம்.செந்திவடிவேல் (77) மதுரை புறநகர்:செந்திவடிவேல்1957ஆம்ஆண்டு மதுரையில் உள்ள பரவை பஞ்சாலை யில் கூலித் தொழிலாளியாக பணியில் சேர்ந்தார். பின்னர் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர், மதுரை மேற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். கே.பி.ஜானகியம்மாள் தலைமையில் நடந்த உழைப்பாளி மக் களுக்காக பாதயாத்திரை, உண்ணாவிர தம், மறியல் உள்ளிட்ட போராட்டங் களில் பங்கேற்றதற்காக 60 நாட்கள் சிறையில் இருந்தார். மிசா காலத்தில் 1 மாத காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எஸ்.டி. சரஸ்வதி(77) தஞ்சாவூர்: மாதர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவராகவும், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். 15 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தவர். குஞ்சிதம் பாரதிமோகன்(77) தஞ்சை: குஞ்சிதம் பாரதி மோகன் மலேயாவில் பிறந்தவர். அவருடைய தந்தைக்கு ஏற்பட்ட தொடர்புகளின் காரணமாக கம்யூனிஸ்டாக மாறியவர். இவரது குடும்பத்தினருடன் மலேயா சிறைச்சாலையில் சிறைக்கொடுமை களை அனுபவித்தவர். 1968ல் தோழர் பாரதி மோகனுக்கும், குஞ்சிதம் அவர் களுக்கும் திருமணம் நடைபெற்றது. 1973-ல் கட்சி உறுப்பினரானார். மயி லாடுதுறை வட்டக்குழு உறுப்பினராக வும், மாவட்டக்குழு உறுப்பினராகவும், மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பணி யாற்றியவர். மாதர் சங்க வட்டச் செயலா ளர், மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகி உட்பட மாதர்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். டி.ராஜாராமன்(75) கடலுhர்: கட்சி யில் இடைக்கமிட்டிச் செயலாளராகவும் மாவட்டக்குழு உறுப்பினராகவும் பணி யாற்றியுள்ளார். பல முறை சிறை சென்று 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளர். 6 மாதங்கள் தலைமறைவாக இருந்துள் ளார். எம்.கருப்புராஜா (75) இராமநாத புரம் : நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர், தொழிலாளி வர்க்கத் தலைவ ராக உயர்ந்தார். படிக்கும் காலத்தில் திராவிடக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்தவர். மார்க் சியக் கருத்துக்களால் ஆகர்சிக்கப்பட்டு 1969ல் மார்க்சிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். ஒன்றுபட்ட விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுர மைய ஊழியராகவும், சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற் றினார். 25 ஆண்டு காலத்திற்கு மேலாக கட்சி அலுவலகத்திலேயே தங்கி கட்சி, விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் என பல அரங்கங்களில் பணியாற்றியவர். சிவ கங்கை – இராமநாதபுரம்மாவட்டங்களில் பல அரங்கங்களுக்கு புதிய ஊழியர் களை உருவாக்கியவர். ப.சண்முகம் (74) புதுக்கோட்டை : ப.சண்முகம் 1957ல் ஒன்றுபட்ட கட்சி யின் உறுப்பினரானார். 64ல் மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார். வலது திருத்தல்வாத போக்கை அம்பலப்படுத்தி, தோழர் ஏ.கே.ஜி. கலந்து கொண்ட புதுக்கோட்டை திலகர் திட லில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்தவர். கட்சியின் மாவட்டச் செய லாளராகவும், மாநிலக்குழு உறுப்பின ராகவும் சிஐடியுவின் பல்வேறு பொறுப்பு களிலும் பணியாற்றியுள்ளார். எம்.செல்லாராம் ( 73 ) வடசென்னை : இவர் கட்சியில் 1970ல் உறுப்பினரானார். ஐ.டி.சி தொழிற்சாலையில் தொழிலாளி யாக, தொழிற்சங்கத் தலைவராக பணி யாற்றியவர். வடசென்னை மாவட்டத் தின் பகுதிச் செயலாளராக 1978 முதல் 1984 வரையும், இராயபுரம் பகுதிச் செய லாளராக 1996 முதல் 2001 வரையும் செயல்பட்டவர். 1981 முதல் 2004 வரை மாவட்டக்குழுவிலும், 1996 முதல் 2001 வரை செயற்குழுவிலும் செயல்பட்டவர். எஸ்.பஞ்சரத்னம் (72) – மின்சார அரங்கம்: 1962-ல் மின்வாரியத்தில் பணியில் சேர்ந்த இவர், கேட்டகிரி சங்கத்தில் நிர்வாகியாகச் செயல்பட்டு 1976-ல் மின்ஊழியர் மத்திய அமைப் பில் இணைந்து தோழர் து.ஜானகிராமன் அவர்களுடன் இணைந்து பணியாற் றியவர். மின்வாரியத்தில் அடிமட்டத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களின் நிரந்தரத்திற்காகப் பாடுபட்டதில் இவ ருக்கு பெரும்பங்குண்டு. 1995 முதல் 2006 வரை மத்திய அமைப்பின் பொதுச் செயலாளராக, அதன் பின் மாநிலத் தலைவராக செயல்பட்டார். அவசர நிலை காலத்தில் தோழர்கள் விபிசி போன்ற தோழர்களுக்கு கூரியராகவும் செயல்பட்டார். 2000-ஆம் முதல் சிஐடியு நிர்வாகியாகவும் செயல்பட்டு தற்போது மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். சிஐடியு மற்றும் மின்ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகளின் நிர்வாகியாகவும், 1993-ம் ஆண்டு முதல் 2009 வரை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல் பட்டார். கே.எம்.கணபதி (65) மதுரை புறநகர்: 1967-68ல் கட்சியில் சேர்ந்தார். ஒன்றாயிருந்த மதுரை தாலுகா (மதுரை வடக்கு, மதுரை தெற்கு, குழுவின் செய லாளராகவும், மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராக வும் பணியாற்றியுள்ளார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய கவுன்சில் உறுப்பினராக 28 வருடம், மாநிலத் துணைத் தலைவராக 28 வருடம், மதுரை மாவட்டச் செயலாள ராக 25வருடம் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாவட்டப் பொருளாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். தோழர் கே.பி.ஜானகியம்மாளுடன் இணைந்து மதுரை மாவட்டத்தில் விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக் கான பல்வேறு போராட்டங்களை நடத் திச் சிறை சென்றுள்ளார். கே.இராஜமாணிக்கம் (64) புதுச் சேரி: புதுவை நகரக்கமிட்டி முதலியார் பேட்டை கட்சிக் கிளைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளி ஆவர்.1968ல் ரோடியர் பஞ்சாலைத் தொழிலாளர் களின் போனஸ் போராட்டத்தில் சிஐ டியுவின் நடவடிக்கைகளில் ஈர்க்கப் பட்டுகட்சிக்குவந்தவர்.1975ல்அவசரநிலைக் காலத்தில் தொடர்ந்து கட்சி மற்றும் தொழிற்சங்கப் பணியாற்றினார். அவசர நிலை காலத்தில் கட்சிப் பத்திரிகை தடை செய்யப்பட்டது. அப்போது கட்சி வெளியிட்டசெய்திக்கதிர்தோழர்என்.ஆர். ராமசாமி மூலம் கட்சித் தோழர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்து பின்னர் அந்த செய்திக்கதிரை வாங்கி எரித்து விடும் பணியை செய்து வந்துள்ளார். புதுச்சேரி பி.ராமமூர்த்தி மூலம் தோழர்கள் எஸ்.வீரபத்திரன், என். ஆர்.ராமசாமி ஆகிய தோழர்கள் தோழர் ராஜமாணிக்கம் வீட்டில் மாறி மாறி அவ்வப்போது தலைமறைவாகத் தங்கி யிருந்து கட்சிப்பணியாற்றி வந்தார்கள். நாகரத்தினம் அண்ணாஸ்ரீ: 1948ல் ஒன்றுபட்ட கட்சியில் சேர்ந்தார். பின்னர் 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். பின்னர் டாக் டர் அண்ணாஜியுடன் இணைந்து மக்க ளுக்கு மருத்துவப்பணியாற்றுவதில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருபவர். 26) டி.அய்யாறு(வயது67)-திருவாரூர் 1970 ல் கட்சியில் சேர்ந்து கட்சியின் ஒன்றியச் செயலாளராக, குடவாசல் பேரூராட்சித்தலைவராக, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டவர். கூலிப்போராட்டத்திலும் இன்னும் மாவட்டத்தின் பல்வேறு வழக்குகளிலும் ஓராண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். அவசர நிலைக் காலத்தின் போது 18 மாதம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டவர். தோழர் கோ.வீரய்யன் போன்ற தலைவர்களோடு இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். குடவாசல் தங்கையன் கொலை வழக்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றி எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: