நாகர்கோவில், பிப்.23- நாகர்கோவிலில் நிகழ் ந்த சாலை விபத்தில், கல் லூரி பேராசிரியர் பலியா னார். நாகர்கோவில் பெரு விளை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் நாகர் கோவில் அருகே உள்ள தனி யார் கல்லூரி ஒன்றில் பேரா சிரியராக பணியாற்றி வந் தார். சம்பவத்தன்று இரவு இவர், தனது பைக்கில் ஆசாரிப்பள்ளம் மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையின் பின்புற ரோ ட்டில் சென்று கொண்டி ருந்தார். அப்போது சடை யால்புதூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (21) என்ப வரும் அவரது நண்பர் பீட் டர் (22) என்பவரும் ஒரு பைக்கில் வந்தனர். எதிர்பா ராத விதமாக வினோத் குமார் வந்த பைக்கும், கிறிஸ் டோபர் ஓட்டி வந்த பை க்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். வினோத் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற் பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்த புரத்தில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். அங்கு தீவிர சிகிச்சை யில் இருந்த வினோத்குமார் இறந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.