வெண்மணிநகர், பிப்.23- சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கள் மேலாண்மை பொன் னுச்சாமி, சு.வெங்கடேசன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா நில மாநாட்டில் பாராட்டப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் கட்சியின் பொதுச்செய லாளர் பிரகாஷ்காரத், சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார். மேலாண்மை பொன் னுச்சாமி எழுதிய “மின்சா ரப் பூ“ சிறுகதைத் தொகுப் பிற்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சு.வெங்கடசேன் எழுதிய “காவல்கோட்டம்“ நாவலு க்கு 2011ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத் தது. நாகையில் நடைபெ றும் கட்சியின் மாநில மா நாட்டின் இரண்டாவது நாள் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அவர்கள் இருவரும் பாராட்டப்பட்டனர். நூல்கள் வெளியீடு இளைஞர் முழக்கம் வெ ளியீடாக எஸ்.கண்ணன் எழுதிய,“ வளர்ச்சியில் லா பம், வறுமையில் வேலை” என்ற நூலை மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தர ராமன் வெளியிட, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.குண சேகரன் பெற்றுக்கொண் டார். எஸ்.பி.ராஜேந்திரன் எழுதிய “ராஜாளியை துரத் தும் ஊர்க்குருவிகள்” என்ற நூலை அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் வெளியிட, மாநில செயற்குழு உறுப் பினர் ப.செல்வசிங் பெற் றுக்கொண்டார். புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழுவினரின் வெளி யீடான, “ உழைப்பவனைப் பாடு” என்ற இசைப்பாடல் குறுந்தகடை மாநில செ யற்குழு உறுப்பினர் கே.தங்க வேல் வெளியிட, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பெற்றுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: