சென்னை, பிப்.23- இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கான ஊழியர்களும் பொது மக்களும், படுகொலை செய் யப்பட்ட முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பிரதீப் தா, மார்க்சிஸ்ட் கட்சியின் பர்துவான் மாவட்டக்குழு உறுப்பினர் கமல் கயேம் இருவரது உடல்களுக்கும் வியாழனன்று (பிப்.23) செவ் வணக்கங்களுடன் அஞ்சலி செலுத்தினர். படுகொலை யைக் கண்டித்து பர்துவான் மாவட்டம் முழுவதும் 12 மணி நேர கடையடைப்புப் போராட்டம் முழுமையாக நடைபெற்றது. பிப்ரவரி 28 அன்று நடை பெற உள்ள நாடுதழுவிய வேலை நிறுத்தப்போராட் டத்தை ஆதரித்தும், மார்க் சிஸ்ட் கட்சியினர் மீது தொடரும் தாக்குதல்களைக் கண்டித்தும் புதனன்று காலையில் பிரதீப் தா தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பர்துவான் நக ரில் ஊர்வலம் நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் ஆயு தங்களுடன் புகுந்து தாக்கி னர். அதில் பிரதீப் தா, கமல் கயேம் இருவரும் கொல்லப் பட்டனர். அஞ்சலி பிரதீப் தா உடல் பர்து வானிலிருந்து கொல்கத்தா வுக்குக் கொண்டுவரப்பட் டது. அங்கு முதலில் மார்க் சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு அலுவல கத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. செங் கொடி போர்த்தப்பட் டிருந்த அவரது உடலுக்கு கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்களும் வரிசை யாக வந்து அஞ்சலி செலுத் தினர். முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, இடது முன்னணி தலை வரும் கட்சியின் மாநிலச் செயலாளருமான பிமன் பாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் மஞ்சு மஜூம்தார், ஆர் எஸ்பி தலைவர் தேபபிரதா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் பிரதீப் தா உடலுக்கு செவ்வணக்கம் செலுத்தினர். பின்னர் அவரது உடல் சட்டமன்ற அலுவலகத் திற்கு எடுத்துச்செல்லப் பட்டது. ஆளுங்கட்சி அநாகரிகம் சட்டமன்ற வளாகத்தில் பிரதீப் தா உடலை வைப் பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நீண்ட மேசை, தலைவர்கள் அமர்வதற் கான நாற்காலிகள் ஆகி யவை திடீரென அப்புறப் படுத்தப்பட்டன. எனவே சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே அவரது உடல் வைக்கப்பட்டது. சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலை வர் சூர்ய காந்த மிஸ்ரா தலைமையில் இடதுசாரிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதீப் தா உடலுக்கு அஞ்சலி செலுத் தினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற போதி லும் பேரவைத் தலைவரோ இதர திரிணாமுல் காங் கிரஸ் உறுப்பினர்களோ அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பிரதீப் தா உடல், இறுதி நிகழ்ச்சிகளுக்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முழு அடைப்பு பர்துவான் நகரில் கமல் கயேம் உடலுக்கும் ஆயிரக் கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இந்தப் படுகொலை களைக் கண்டித்து, மார்க் சிஸ்ட் கட்சியின் வேண்டு கோளை ஏற்று, பர்துவான் மாவட்டம் முழுவதும் வியாழனன்று முழுமை யான கடையடைப்புப் போராட்டம் நடை பெற்றது. பெரிய நிறுவனங் கள் முதல் சிறிய கடைகள் வரையில் மூடப்பட்டிருந் தன. சாலையில் பேருந்து கள் இயங்கவில்லை. பால் உள்ளிட்ட முக்கியத் தேவை களுக்கான வண்டிகள் மட்டுமே இயங்கின. கொல்கத்தா நகரிலும் இந்தப் படுகொலையைக் கண்டித்து ஊர்வலம் நடை பெற்றது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்டன ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடை பெற்றன. சிஐடியு தொழிற் சங்கம் சார்பாகவும் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மம்தா மமதை இதனிடையே, உட்கட்சி மோதலால்தான் பிரதீப் தா, கமல் கயேம் இருவரும் கொல்லப்பட்டதாக முதல மைச்சர் மம்தா பானர்ஜி, காவல்துறையின் விசார ணை முடிவு எப்படி அமைய வேண்டும் என்று கட்டா யப்படுத்துவது போல் அறிவித்துள்ளார். இதற்கு இடது முன்னணி தலைவர் கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். காவல்துறை உயரதிகாரி ஒருவர், மம்தா அரசின் அமைச்சர்கள் சிலர், குற்ற வாளிகளுக்கு வெளிப் படை யாக நற்சான்றிதழ் தருவது போலப் பேசுகிறார்கள் என்று செய்தியாளர்களி டம் கூறியுள்ளார். அமைச் சர்கள் இவ்வாறு பேசுவது உண்மையான குற்றவாளி களைப் பிடிப்பதற்கும், நேர் மையாக விசாரணை நடத் துவதற்கும் இடையூறாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன் பாகவே அவர்களுக்கு நற் சான்றிதழ் தருவது போல ஆட்சியாளர்கள் பேசி யிருப்பதற்கு எழுத்தாளர் கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.