லடேஹர், பிப். 23 – லடேஹர் மாவட்டத்தில் உள்ள பலுமாத் காவல்நிலை யம் மீதும், அதன் அருகில் உள்ள பாதுகாப்புப் படையினர் முகாம் மீதும் மாவோயிஸ்ட் டுகள் சரமாரியாகத் துப்பாக்கி யால் சுட்டனர். காவல்நிலைய சாலை ஓரத்தில் படுத்திருந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிக் குண்டுக்கு பலி யானார் என்று பலுமாத் காவல்நிலைய பொறுப்பு அதி காரி வினய்குமார் சிங் செய்தி யாளர்களிடம் கூறினார். பாதுகாப்புப் படையினர் திருப்பிச்சுட்டவுடன் மாவோ யிஸ்ட்டுகள் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இரு தரப் பிலும் யாரும் பலியாகவில் லை. அதே பகுதியில் இருந்த பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேந்திர சாகுவின் வீட்டை மாவோயிஸ்ட்டுகள் வெடி வைத்துத் தகர்த்தனர். இத னால் ஆத்திரமுற்ற கிராமத்தி னர் தேசிய நெடுஞ்சாலை 99ல் மறியல் நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: