தலித் மக்களின் ஜனநாயக உணர்வை மதிக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரை காவல்துறை படுகொலை செய்தது. தமி ழகமே இதை வன்மையாகக் கண்டித்தது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவ றியதன் காரணமாக மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ விசார ணைக்கு மாற்றி உத்தரவிட் டுள்ளது. சேலத்தில் மக்கள் நல் வாழ்விற்கான சூப்பர் ஸ்பெ சாலிட்டி மருத்துவமனை யைத் தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி நடைபயணப் பிரச்சாரம் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் மீது சேலம் காவல் துறை கொடிய தடியடித் தாக்குதலை நடத்தியது. நில மோசடியை எதிர்த்த போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தூத்துக்குடி மாவட் டச் செயலாளர் கே. கனக ராஜ் வீட்டில் குண்டு வீசிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. நில மோசடி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதி கரித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 47 பேர் கொல்லப்பட்டுள்ள தாக ஒரு நாளிதழ் குறிப் பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 727 விசாரணைக் கைதிகள் காவலின் போது கொல்லப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 5 வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமி ழகத்தில் விசாரணைக் கைதி கள் 744 பேர் மரணமடைந் ததாக 2011, நவம்பர் 23-ல் மற் றொரு நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. அதிமுக, திமுக என வித்தியாசம் இல் லாமல் இரண்டு ஆட்சியி லும், காவல் நிலைய மர ணங்களும், விசாரணைக் கைதிகளின் சாவுகளும் நடந்துள்ளதை அறிய முடி கிறது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக் கப்பட்ட உள்ளாட்சி மன் றப் பிரதிநிதிகள் மீது சமூக விரோதிகள் நடத்திய படு கொலைகள் அதிகரித்துள் ளன. செங்கல்பட்டு நகர் மன்றத் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர், மன் னார்குடி ஊராட்சி ஒன்றி யத் துணைத் தலைவர் ஆகி யோர் படுகொலை சமீபத் திய சம்பவங்களாகும். சென் னையில் வங்கிக் கொள்ளை கள், திருப்பூர் நகைக் கடை கொள்ளை என தமிழகத் தில் கொள்ளைச் சம்பவங் களும் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சிக்காலம் போலவே அதிமுக ஆட்சிக் காலத்திலும் காவல்துறை யின் அத்துமீறல்கள், அரா ஜகங்கள், படுகொலைகள் அதிகரித்து உள்ளன என் பது வெளிப்படையான உண்மை. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அணுகுமுறை மக்களிடம் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வை யும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இத்த கைய சம்பவங்களுக்கு அதி முக அரசு பொறுப்பேற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு சுட்டிக் காட்டுகிறது. காவல்துறை நவீனப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. சட்டம் – ஒழுங்கை முறையாக பரா மரிப்பதோடு, மனித உரி மைகளை, ஜனநாயக உரி மைகளை மதித்து நடக்க வும், மக்கள் திரளும் இடங் களில் நிதானமான அணுகு முறையை மனித நேய உணர்வோடு கையாளவும் மனோரீதியான பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். அடித்தட்டு தலித் மற்றும் பழங்குடி மக்களை, விளிம்பு நிலைவாழ் மக்க ளை வாழ்க்கைக்காக, உரி மைக்காகப் போராடும் உழைப்பாளிகளை எப்படி வேண்டுமானாலும் அடக்க லாம், ஒடுக்கலாம், சுரண்ட லாம் என்ற பிற்போக்கு கருத்தினை காவல்துறை மாற்றிக் கொள்ள வேண் டும். இதனை உறுதிப்படுத்த தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். காவலர் கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், அவர்களின் வேலைப் பளுவைக் குறைக் கவும், சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாக மாற்றவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். காவல்துறைக் கும், சமூக விரோதிகளுக் கும் உள்ள உறவு துண்டிக் கப்பட வேண்டும். இத்த கைய நடவடிக்கைகள் மூலமே காவல்துறை சட்டம் – ஒழுங்கை பராமரிப்பவர் களாகவும், மக்களுக்கு நண் பர்களாகவும் செயல்பட முடியும் என்று தமிழக அர சுக்கும், காவல்துறைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு சுட்டிக் காட்டுகிறது. மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் நடைபெறும் போராட்டங் களில் பங்கேற்க பொது மக்களும், ஜனநாயக சக்தி களும் முன்வர வேண்டு மென இம்மாநாடு வேண்டு கிறது. இத்தீர்மானத்தை கட்சி யின் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன் முன் மொழிய, மாநிலக்குழு உறுப்பினர் இரா. அண்ணா துரை எம்.எல்.ஏ. வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: