வெண்மணிநகர் (நாகை), பிப்.23- காவல்துறையின் அத்துமீறல் களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு பிப்ரவரி 22ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ். ராமச்சந் திரன்பிள்ளை, கே. வரதராசன், பிருந்தா காரத், பி.வி. ராகவலு மற்றும் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஏ.கே. பத்ம நாபன், உ.வாசுகி, சுதாசுந்தரராமன், மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப் பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலு மிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண் டனர். இரண் டாம் நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின் வருமாறு: தமிழகத்தில் காவல்துறை செயல்பாடு குறித்து, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பல கேள்வி களை எழுப்பியுள்ள போதிலும், காவல்துறை செயல்பாட்டில் மாற்ற மில்லை என்பதையே சமீபத்திய நிகழ் வுகள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் 9 மாத கால ஆட்சியில் காவல்துறையை நவீ னப்படுத்த சிறப்பு நிதியாக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறை தன்னை நவீனப்படுத்தி சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் எந்த முன் னேற்றகரமான நடவடிக்கை யும் எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்காலத்து செயல்பாடுகளே தொடர்கின்றன. விழுப்புரம் மாவட்டம், திருக்கோ விலூர் காவல்துறை இருளர் இனப் பெண்களை விசாரணைக்காக அழைத் துச் சென்று பாலியல் வன்முறைத் தாக்கு தலுக்கு உட்படுத்திய கொடுமை, வாச் சாத்தி வழக்கில் 215 காவல்துறை, வனத்துறை அதிகாரிகளை தண்டித்து தீர்ப்பு வெளிவந்த சில தினங்களிலேயே நடந் துள்ளது. இன்று வரை பாலியல் வன் கொடுமை குற்றமிழைத்த காவல் துறை யினர் யாரும் கைது செய்யப் பட வில்லை. உயர்நீதிமன்றம் பாலியல் வன் முறை வழக்கில் ஏன் காவல்துறை யினரை கைது செய்யவில்லை? என்ற கேள்வி நியாயமானதாகும். மாநில அரசு தரப்பில் காவல்துறையினர் குற்றம் செய்யவில்லை என்று வாதிட் டது கண்டிக்கத்தக்கதாகும். பரமக்குடியில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தத்தடை விதித்து, அங்கு திரண்ட (தொடர்ச்சி 3ம் பக்கம்)

Leave A Reply

%d bloggers like this: