மும்பை, பிப். 23 – மும்பை காங்கிரஸ் தலை வர் கிருபாசங்கர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. பினாமிகள் பெயரில் சொத்துக்களைக் குவித்ததற் காக அவர் மீது ஊழல் தடுப் புச் சட்டத்தின் குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்குமாறு உயர்நீதிமன் றம் கூறியுள்ளது. அதை யடுத்து கிருபா சங்கரின் பதவி விலகலை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனாலும் கூட கிருபா சங்கரின் பதவி விலகலுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கும் தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரி வித்தன. அவருடைய சொத் துக்களைப் பறிமுதல் செய்ய வும் நீதிமன்றம் ஆணையிட் டுள்ளது. இந்த விசாரணைக்கு பொறுப்பாளராக மும்பை காவல்துறை ஆணையரை நீதிமன்றம் நியமித்துள்ளது.

Leave A Reply