கரூர், பிப்.24- கரூர் காந்திகிராமத்தில் உள்ள லார்ட்ஸ்பார்க் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் விiயாட்டு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்வி நிறுவ னத் தலைவர் ஆர்.ஜெயராஜ், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் சி.புண்ணியமூர்த்தி ஆகியோர் விளையாட்டு போட் டிகளை துவக்கிவைத்து சிறப் புரையாற்றினர். பள்ளியின் முதல்வர் டாக்டர் ஏ.கோவிந் தராஜன், ஆலோசகர் கே.ஆர். சின்னதுரை மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ-மாண வியர் கலந்துகொண்டனர். நீளம் தாண்டுதல், சிலம் பம், கோ-கோ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.